எங்க சந்ததியே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.. சட்டப்பேரவையில் கண்ணீர் விட்ட அமைச்சர் காமராஜ்.!
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் கண்ணீர் விட்டு பேசிய சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
உணவுத்துறை அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அமைச்சருக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். அமைச்சர் குணமடைய வேண்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் இரவு பகலாக மருத்துவனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்றார். அப்போது அவர் கண்ணீர் விட்டு பேசியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்குத் தன் சந்ததியினரே நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்கக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது: கொரோனா தொற்றில் இருந்து நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.