அவதூறு பேச்சு.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு.!

அவதூறு பேச்சு.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு.!

Update: 2020-12-22 08:29 GMT

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் கொல்கத்தா நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். இவர் அடிக்கடி நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களும் அவதூறாக பேசி வீடியோவாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இது தொடர்பாக கடந்த டிசம்பர் 2ம் தேதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் பின்னர், உடல்நல குறைவு காரணமாக கடந்த 9ம் தேதி கர்ணன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு அவரை கண்காணித்து வந்தது.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்ததால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.