அரசு பேருந்துகள் வழக்கம் போல் நாளை ஓடும்.. வராதவர்களுக்கு ஊதியம் கிடையாது.!
அரசு பேருந்துகள் வழக்கம் போல் நாளை ஓடும்.. வராதவர்களுக்கு ஊதியம் கிடையாது.!
போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படுகின்ற தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. அண்ணா தொழிற்சங்கம், பாமக, தேமுதிக, பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், நாளைக்கு வேலைக்கு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் அரசு உயர் அதிகாரி கூறியுள்ளார்.
இதனால் வேலைக்கு செல்பவர்கள் தைரியமாக நாளை அரசு பேருந்துகளில் செல்லலாம். இதற்காக அனைத்து பேருந்து டிப்போக்களிலும் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.