மக்களுக்கு எது நல்லதோ அதை மோடி அரசு செய்கிறது! எதற்கும் அஞ்சாமல் மேலும் செய்வோம் – அமித்ஷா!

பிரதமர் மோடியின் சங்கப்பணிகள் மற்றும் அவருடைய இயல்பான திறமைகள் அவரை எப்படி வெளிக் கொண்டுவந்தன என்பது குறித்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலின் பெயர் ‘Karmayoddha Granth’ ( கர்மோதய கிராந்த்) இந்த புத்தககத்தை வெளியிட்டு விழாவில் பேசிய அமித்ஷா கூறுகையில், மக்களுக்கு விருப்பமானது மட்டுமல்ல அவர்களுக்கு எது நல்லதோ அதையே பிரதமர் மோடி செய்து வருகிறார்.

Update: 2020-01-08 11:03 GMT

மக்களை அச்சுறுத்தும் முந்தைய அரசின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370, 35 ஏ நீக்கப்பட்டுள்ளதுடன், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. முத்தலாக் நீக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளில் பிரதமர் மோடி தெளிவான முடிவு எடுத்து, பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் புதிய அரசிற்கான பாதையை வகுக்கும் புதிய கலாச்சாரத்தையும் மோடி உருவாக்கி உள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடியின் பலவித நடவடிக்கைகளை ஏராளமான மக்கள் பாராட்டுகின்றனர். என்ன நடக்கும், எப்படி நடக்கும், மக்கள் என்ன சொல்வார்கள் என்பன போன்ற அச்சங்கள் எல்லாம் மோடி அரசுக்கு கிடையாது. இது தொடர்பான கேள்விகள் நீக்கப்பட்டு, மக்களுக்கு எது நல்லதோ அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.