நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலில் ஒப்பிட்டுப் பார்த்தால் திமுகவின் ஓட்டு வங்கி சரிவு – ஜெயக்குமார்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலில் ஒப்பிட்டுப் பார்த்தால் திமுகவின் வாக்கு வங்கி சரிவு இருப்பதாகவும் அதை தான் தேய்பிறை என்று கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 சீட்டுகள் ஜெயித்த திமுக மற்றும் வேலூரில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் திமுக வென்றதாகவும் தெரிவித்தார்.

Update: 2020-01-08 11:07 GMT

திமுக கடந்த நாடாளுமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுக்களையும் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாங்கிய ஓட்டுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திமுகவின் ஓட்டு சதவீதம் மிகவும் குறைந்து இருப்பதாகவும் இதுதான் என்னுடைய கணக்கு என்றும் அது மிகத் தெளிவாக இருக்கிறது என்றும் ஸ்டாலின் அவர்கள் மக்களை குழப்பி திசை திருப்பி அவர்களை ஏதோ வளர்ந்து விட்டதாக கூறி வருகிறார், இந்த நிலை நீடித்தால் 2021 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று கூறினார் மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்க கூடாது என்று நீதிமன்றம் சென்றவர்கள் உள்ளாட்சித் சட்டமன்றத் தேர்தல் நடக்க கூடாது என்று நீதிமன்றத்துக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.