விரைந்தது இந்திய போர்க்கப்பல் : உலகப்போர் மூளும் அபாயத்திலும் துணிந்து அடிக்கும் இந்தியா – என்ன நடந்தாலும் நாட்டை காக்க மேற்கொள்ளப்படும் இராஜதந்திர நடவடிக்கை.!

By : Suresh Jangir
ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகராம் உலக அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ள நிலையில், அமெரிக்க படைகள் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகத்திலேயே வலிமையான ராணுவத்தை கைவசம் வைத்திருக்கிறோம். நாளை காலை அறிக்கையுடன் வருகிறேன் என்று கூறி பீதி கிளப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்த நிலையில், அமெரிக்க படைகளை பின்வாங்க சொல்லி ஈரான் தொடர்ச்சியாக, அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கடந்த சில தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தீவிர நிலையை உணர்ந்த இந்தியா இரண்டு போர் கப்பல்களை மேற்கு ஆசியாவை நோக்கி அனுப்பியுள்ளது. ஒரு கப்பல் ஒமன் வளைகுடாவிற்கும் மற்றொன்று ஏடன் வளைகுடாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.தற்போதுள்ள நிலைமையை கண்காணிக்க இரு கப்பல்களும் விரைந்துள்ளன.
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றத்தை இந்திய போர்க்கப்பல்கள் நேரடியாக கண்காணித்து அறிக்கை வழங்கும். மேலும் ஈராக், ஈரான் நாடுகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர பிரதமரின் உத்தரவின் பேரில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற அபாயத்தை மற்ற நாடுகள் எதிர்கொள்ளும் வேளையிலும், இந்தியா ரஷ்யாவுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாக அந்த சிக்கலும் நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
