எனக்கு 'என்டே' கிடையாது: ஓய்வுப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிறிஸ் கெய்ல்

By : Suresh Jangir
டி20 கிரிக்கெட்டின் உலக நாயகன் கிறிஸ் கெய்ல் 'இயன்றவரை ஆடிக்கொண்டேதான் இருப்பேன்' என்று ஓய்வு குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரிமியர் லீகில் சட்டோகிராம் சாலஞ்சர்ச் அணிக்காக ஜமைக்காவின் உலக டி20 நாயகன் திரும்பினார்.
"நிறைய பேர் கிறிஸ் கெய்லை மைதானத்தில், களத்தில் காண விரும்புகின்றனர். எனக்கு இன்னமும் இந்த கிரிக்கெட் ஆட்டம் அலுக்கவில்லை, பெரிய நேயம்தான் உள்ளது. எனவே என்னால் முடிந்தவரை ஆடிக்கொண்டேதான் இருப்பேன்.
என் உடல் நன்றாக உள்ளது.. நாட்கள் ஆக ஆக இளமை திரும்புகிறது. எனவே 45 வயது வரை ஆடலாம் என்று இருக்கிறேன். ஆம் 45 நல்ல எண். " என்கிறார் கிறிஸ் கெய்ல்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கார்ட்டூனிஸ்ட் மதன் ஒரு கார்ட்டூன் வரைந்தார், அதில் வயதான, முதிய கிரிக்கெட் வீரர் களமிறங்குவார், அப்போது இருவர் பேசிக்கொள்வது போல் அமைத்திருப்பார். அதில் ஒருவர் 'என்ன செய்வது இன்னும் பார்மில் இருக்கிறாரே' என்று கூறுவார்.
கிறிஸ் கெய்ல் பேட்டி மதன் கார்ட்டூனை நினைவூட்டுகிறது.
