Kathir News
Begin typing your search above and press return to search.

நிரம்பாத 97,980 பொறியியல் இடங்கள் : காலியாகும் பொறியியல் கல்லூரிகள் - உணர்த்துவது என்ன ?

நிரம்பாத 97,980 பொறியியல் இடங்கள் : காலியாகும் பொறியியல் கல்லூரிகள் - உணர்த்துவது என்ன ?

நிரம்பாத 97,980 பொறியியல் இடங்கள் : காலியாகும் பொறியியல் கல்லூரிகள் - உணர்த்துவது என்ன ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Aug 2018 8:09 AM GMT

பொது பிரிவு மாணவர்களுக்கான பி.இ கலந்தாய்வு ஞாயிற்று கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 74,601 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் பி.இ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை இன்றி 97,980 இடங்கள் காலியாக உள்ளன. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த சேர்க்கையாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் 1,72,581 அரசு ஒதுக்கீடு பி.இ இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நிடந்தது. இதில் விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்று திறனாளிகள், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் மொத்தம் 1,953 பேர் இடங்களை தேர்வு செய்து, இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளனர். அதன் பிறகு பொது பிரிவு மாணவர்களுக்கான 5 சுற்றுகளை கொண்ட ஆன் லைன் கலந்தாய்வு தொடங்கப்பட்டு ஞாயிற்றுகிழமையுடன் வரை நடத்தப்பட்டது. இதில் 72,648 மாணவ மாணவிகள் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 97,980 காலியாக உள்ளது.
கடந்த ஆண்டுகளைவிட மிகக் குறைந்த சேர்க்கை. 2015-2016 காலாண்டில் 1,01,620 பேர் சேர்க்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்பின் மீது மாணவர்களின் ஆர்வம் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது. காரணங்கள் பல
- லட்சக்கணக்கில் செலவு செய்து 4 வருடங்கள் படித்த பிறகு ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்கின்றனர். BCA, BSC போன்ற மூன்று வருட படிப்பு முடித்த மாணவர்களும் சமநிலையில் சேர்க்கப்படுவதால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
- Automation, Artificial Intelligence போன்றவற்றால் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது
- Mechanical, Civil போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருக்கிறது.
- இரண்டு வருடங்களுக்கு முன்பு படிப்பை முடித்த பட்டதாரிகள் இன்னும் தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News