Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து தெய்வங்களை கொச்சைபடுத்தி அப்பாவி ஏழைகளை மதமாற்றம் செய்து வரும் 265 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜான்பூர் நீதிமன்றம் உத்தரவு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Sep 2018 6:38 AM GMT

உத்தரபிரதேச மாநிலம் ஜானபூரில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி, பிரிஜேஷ் சிங் என்ற வழக்கறிஞர் 156(3) பிரிவின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிறிஸ்துவ தேவாலயம் நடத்தி வரும் யாதவ் மற்றும் அவருடன் சேர்ந்த 260 பேர் மற்றும் 8 பெண்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார். அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்து தெய்வங்களையும், வழிபாடு முறைகளையும், புராணங்களையும் கொச்சை படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜான்பூர் நீதிமன்றம், 265 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உதரவிட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்து மதத்தின் மீது வெறுப்பை விதைப்பது, பில்லி சூனியம் வைப்பது, அப்பாவி ஏழைகளை மத மாற்றம் செய்வது, தடை செய்யப்பட்ட மருந்துகளை பருகுவது போன்ற குற்றங்களுக்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த உத்தரவு பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் இது போன்று தினமும் நடைபெறும் ஆயிரக்கணக்கான இந்து விரோத மதமாற்ற செயல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News