Top
undefined
Begin typing your search above and press return to search.

வரலாறு காணாத அளவிற்கு வளர்ந்திருக்கும் இந்திய பாதுகாப்பு துறை: வெளிநாடுகளுடனான உறவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்தியா! சிறப்பு கட்டுரை

வரலாறு காணாத அளவிற்கு வளர்ந்திருக்கும் இந்திய பாதுகாப்பு துறை: வெளிநாடுகளுடனான உறவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்தியா! சிறப்பு கட்டுரை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Oct 2018 5:58 AM GMT

2016 செப்டம்பர் 28 - 29 தேதிக்கு இடைபட்ட இரவில் பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு கடுமையான அடியை வழங்க நிகழ்த்தப்பட்ட "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" எனப்படும் வெற்றிகரமான தாக்குதலின் அடையாளமாக அச்சம்பவம் நிகழ்ந்த தருணத்தை தற்போது தேசமே கொண்டாடி வருகிறது. துணிச்சல் மிகுந்த இவ்வரலாற்று சம்பவத்தை கொண்டாடும் தருவாயில் நாம் நினைவு கூற வேண்டிய ஒன்று இது. ஏதோ ஒரு முறை மட்டுமே நிகழ்ந்த சம்பவம் அல்ல. இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதியை திடப்படுத்தும் அதே வேளையில் இந்தியாவின் ராணுவ வலிமையை அதிகரிக்க கடந்த நான்காண்டுகளாக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பை தயார் நிலையில் வைத்திருக்கவும் மற்றும் பல சாகச உத்திகளை கையாளவும் மோடி அரசு பல்வேறு அம்சங்களில் பணையாற்றி வந்துள்ளது. பாதுகாப்பு துறையில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விரிவாக இங்கே காணலாம்.

1. இந்திய சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய இராணுவம் முதன் முறையாக பழுது நீக்கப்பட்டது


செகத்கார் கமிட்டியின் சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அது தொடர்பான வேலைகள் துவங்கிய சமயத்தில் இந்தியா இராணுவத்தின் பழுது நீக்கும் பணி துவங்கியது. டிசம்பர் 2016-ல் இந்த கமிட்டி ஓர் அறிக்கையை சமர்பித்தது. அதன் பின், ஓர் திட்டத்தை சிறப்பாக தீட்டி அதை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் 99 பரிந்துரைகளை இராணுவ படைகளுக்கு அனுப்பியது. இதில் இராணுவம் தொடர்பான 65 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் கட்டமாக டிசம்பர் 3, 2019-க்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற பரிந்துரைகள் எல்லாம் விமானப்படை மற்றும் கப்பல் படை தொடர்பானது.
ஒவ்வொறு காலகட்டமாக மொத்தம் 39 மிலிட்டிரி பார்ம்களை(Military Farm) மூட முடிவெடுத்தது பாதுகாப்பு கேபினட் கமிட்டி(CSS) . அந்த நடைமுறையில் உள்ளடக்கியுள்ள அம்சங்கள் சில இங்கே:
* மொத்தம் 57,000 பணியிடங்களுக்கான தேர்வை நடத்துவது
* சிக்னல் யூனிட்களை உகந்ததாக்குவது
* போர் தளவாடங்களை மறுசீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல்
* "பல் முதல் வால்"(teeth to tail) வரையான விகிதத்தை அதிகரிக்க போர் திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு செலவை மறுசீரமைத்தல்

2. ஒரே தரவரிசை ஒரே ஓய்வூதியம்(OROP – One Rank One Pension) திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்


கடந்த நாற்பதாண்டுகளில் OROP திட்டத்தை முதல்முறையாக நடைமுறைப்படுத்தி பாதுகாப்பு படையினரின் மன உறுதியை பன்மடங்கு கூட்டிய முதல் அரசு மோடி அரசு. கடந்த காங்கிரஸ் அரசு முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளாமல் OROP திட்டத்திற்க்காக வெறும் ₹500 கோடியை பிப்ரவரி 2014 பட்ஜட்டில் ஒதுக்கியிருந்தது. ஆனால், நிதர்சனம் என்னவெனில் OROP திட்டத்தை நடைமுறைப்பத்த ₹8,000 முதல் ₹10,000 கோடி வரை தேவை. அந்த மாபெரும் அடியை துணிந்து  துவங்கியுள்ளது மோடி அரசு.
* CGDA-விடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் படி ₹4,161.45 கோடி, ₹2,397.22 கோடி, ₹2,320.7 கோடி மற்றும் ₹1,859.72 கோடி அகிய நிதி முறையே முதல், இரண்டாம், மூன்றாம், மற்றும் நான்காம் கட்ட OROP நிலுவை தவணையாக செலுத்தப்பட்டுள்ளது.
* 4 இலட்சம், 15.9 இலட்சம், 15.7 இலட்சம் மற்றும் 13.28 இலட்சம் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களே கடந்த நான்கு ஆண்டுகளில் செலுத்தப்பட்ட தொகையின் மூலம் பயன் அடைந்தவர்கள்.
இத்தோடு இன்னும் சில திட்டங்களும் முன்னாள் இராணுவ வீரர்களின் நலனுக்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
* 2015-16 வரையிலான கல்வியாண்டில் பிரதம மந்திரி ஊக்க தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வந்த ஊக்க தொகையின் எண்ணிக்கை ₹4000-லிருந்து ₹5500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* முன்னாள் இராணுவ வீரர்களுடைய மகள்களின் திருமணத்திற்க்கான  ஊக்க தொகை ₹16,000-லிருந்து ₹50,000 ஆக ஏப்ரல் 2016-ல் உயர்த்தியது.
* இணையத்தில் OROP விண்ணப்பங்களை பரிசீலிக்க இணையதளம் ஒன்று கேந்திரிய சைனிக் போர்ட் சார்பில் மார்ச் 11, 2016 இல் துவங்கப்பட்டது.

3. கொள்முதலை வலுப்படுத்துதல்


கடந்த பத்தாண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த்திய ஆட்சியின் மூலம் இராணுவ செயல்பாட்டின் தயார் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து செய்யப்பட்டு வந்த ஆயுதம் மற்றும் கம்பளி கொள்முதல் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இது போன்ற நடவடிக்கைகள் மோசடிகளிலிருந்து அவர்களை காக்கவில்லை, குறிப்பாக அகஸ்தா வெஸ்ட்லேண்ட் வழக்கு. பாதுகாப்புத்துறை அமைச்சகமே சர்ச்சைக்குள் ஆழ்ந்திருந்தது.
இப்படியிருந்த சூழல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பின் எவ்வாறு எழுச்சி கண்டுள்ளது என்ற காட்சிகள் இங்கே:
* இந்தியாவின் பாதுகாப்பு துறை 100% வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகளை திறந்துள்ளது.
* ஏப்ரல் 1,2016-ல் புதிதாக கொண்டு வரப்பட்ட DPP 2016-யின் மூலம் கொள்முதல் நடைமுறைகள் முற்றிலுமாக நடப்பு அரசின் மூலம் பழுது பார்க்கப்பட்டுள்ளது
* கிட்டதட்ட 4 இலட்சம் கோடிமதிப்புள்ள ஏரளமான உட்சபட்ச  மற்றும் தீவிர கொள்முதல் முன்மொழிவுகளை முதல் மூன்று ஆண்டுகளில் தீர்த்துள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்
* ஜூலை 2017-ல், எமர்ஜென்சி காலங்களில் நேரடியாக வாங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. வெடிப்பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டோர்ஸ்  உட்பட இந்த வாங்கும் பட்டியலில் பீரங்கி குண்டுகள், டேங்க் குண்டுகள் மற்றும் ஆயுத அமைப்புக்கான பல்வேறு உதிரிபாகங்கள் ஆகியவையும் உள்ளடங்கும்
* பிப்ரவரி 13, 2018-ல் ₹15,935 கோடி மதிப்புமிக்க பிரமாண்ட கொள்முதல் நிகழ்வு ஒன்று தீர்த்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய இராணுவப்படைக்கான கீழ்கண்ட முக்கிய  ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.
** மூன்று சேவைகளுக்கான(Navy, Army, Airforce) 7.4 இலட்சம் தாக்குதல் ரைப்பில்கள்
** இந்திய இராணுவ படை மற்றும் இந்திய விமான படைக்கான 5,719 ஸ்னைப்பர் ரைப்பல்கள்
** இந்திய கப்பல் படையின் நீர்மூழ்கி கப்பலின் போர் நடவடிக்கை திறனை அதிகரிக்க , நவீன டார்பேடோ டிகோய் சிஸ்டம்ஸ் (ATDS) கொள்முதல் செய்ய DAC ஒப்புதல் அளித்தது.
* இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள், ₹9100 கோடி மதிப்பிலான ஆகாஷ் மிஷைல் சிஸ்டம்ஸ்  உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்ய செப்டம்பர் 18, 2018-ல் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(DAC) அனுமதி வழங்கியது. இந்த கொள்முதலில் புதிய வடிவமைப்பான T-90 MBT(முக்கிய போர் டேங்க்) மற்றும் வழிகாட்டுகிற ஆயுத அமைப்பிற்க்கான சோதனை இயந்திர உருவாக்கம் ஆகியவையும் உள்ளடங்கும். அதனோடு நீருக்கடியில் சுவாசிக்கிற இயந்திரமும் அடங்கும்.

4. மற்ற நாடுகளுடனான  தீவிர பாதுகாப்பு ஒப்பந்தம்


தீவிர இடைவெளிகளை நடப்பு அரசு கொள்முதலின் மூலமாக எவ்வளவு திறம்பட மோடி அரசு கையாண்டிருக்கிறது என்பது கீழ்கண்ட ஒப்பந்தங்களின் மூலம் அறியலாம்.
* 36 ரபேல் விமானத்திற்க்கான 8.7 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
* 22 போயிங் AH-64E அப்பாச்சி லாங்பவ் தாக்குதலுக்கான ஹெலிகாப்டர் மற்றும் 15 சின்னுக் கனத்தை உயர்த்தும் சாப்பர்களுக்கான ஒப்பந்தம் 3.1 பில்லியன் டாலருக்கு போடப்பட்டுள்ளது
* இஸ்ரேலிலிருந்து அதிநவீன மேற்பரப்பில் இயங்கும் காற்று ஏவுகனைக்கான ஒப்பந்தம் 2 பில்லியன் டாலருக்கு போடப்பட்டுள்ளது.
* 145 அல்ட்ரா லைட் ஹவிட்சர்ஸ் (M777) அமெரிக்காவிலிருந்து 750 மில்லியன் டாலருக்கு பெறுவதற்கான ஒப்பந்தம்
* 100 K9 வஜ்ரா - T ஆர்டிலரி துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தம் 720 மில்லியன் டாலருக்கு போடப்பட்டுள்ளது.

5. பாதுகாப்பு துறையில் "மேக் இன் இந்தியா" திட்டம்


சர்வதேச ஒப்பந்தங்களில் முன்னேற்றம் அடைந்திருப்பதன் மூலம் "மேக் இன் இந்தியா" திட்டமும் உத்வேகம் பெற்றுள்ளது. பாதுகாப்பு துறையின் அனைத்து அங்கத்திலும் "மேக் இன் இந்தியா" நடப்பிலுள்ளது. அதாவது போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் கப்பல்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், ஏவுகணைகள், ரேடர்கள், மின்னணு போர் அமைப்புகள் போன்றவையில் அதன் பங்கு முக்கியமானது. அதில் சிலவை இங்கே:
ஐஎன்எஸ் கல்வரி: "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் Scorpene-class நீர்மூழ்கி கப்பல் இந்திய கப்பல் படைக்கு அளிக்கப்பட்டது. மாசகன் டாக் லிமிட்டட் நிறுவனம் ப்ரான்ஸ் நாட்டின் DCNS உடன் இணைந்து இதை கட்டமைத்தது. இந்திய நேவி ப்ராஜெக்ட் 75 இன் கீழ் உருவாக்கப்பட்ட ஆறு Scorpene-class நீர்மூழ்கி கப்பலில் முதல் Scorpene-class நீர்மூழ்கி கப்பல் கல்வரி தான்.
அஸ்த்ரா: இது இந்தியாவின் உள்நாட்டு ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் ஏவுகணை. இதன் முதல் சோதனை துப்பாக்கி சூடு சுக்காய் - 30 போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேக் இன் இந்தியா ஏவுகனை DRDO மூலம் உருவாக்கப்பட்டது.
இந்திய இராணுவத்திற்கான புல்லட் ப்ரூப் ஹெல்மட்கள்: கான்பூர் தளத்தில் தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் ஹெல்மெட்களை பெற்றிருக்கின்றது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்திற்கான மொத்தம் 1 இலட்சத்தி 58 ஆயிரம் புல்லட் புரூப் ஹெல்மெட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
லைட் போர் விமானம்: மோடி அவர்களால் நிறுவப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தில் இசைந்து முதல் அதிநவீன பன்முக பங்காற்றும் போர் விமானம் ஜூலை 1, 2016-ல் உருவாக்கப்பட்டது.
அப்பாச்சி அதிநவீன சாப்பர்ஸ்: அப்பாச்சி அதிநவீன சாப்பர்ஸ் இந்திய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டது. 6 அப்பச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்திய இராணுவத்திற்க்காக வாங்கும் முன்மொழிவுக்கு DAC ஒப்புதல் அளித்தது. உலகின் அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டராக இது அறியப்படுகிறது.
ஐ.என்.எஸ் கன்தெரி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரண்டாம் நீர்மூழ்கி கப்பல் ஜனவரி 2017 நிறுவப்பட்டது, தற்போது முன்னோட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஹெர்குலஸ் சி-130 ஜெ-30: சிறப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து வானிலை போக்குவரத்து விமானங்களை IAF பெற்றுள்ளது. இந்த விமானம் அதன் திறனை நேபால், பீகார் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த பேரழிவு நிவாரண நடவடிக்கையில் ஏராளமான முறை நிருபித்துள்ளது.
"பை அன்ட் மேக் இந்தியா" திட்டத்தின் கீழ் 4 இலட்சம் தாக்குதல் ரைபில்கள் தளவாடங்கள் தொழிற்சாலை போர்ட் மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டு இடங்களிலும் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.
உயர் துல்லியம் நிறைந்த ஸ்னைப்பர் ரைப்பில்கள் "பை குளோபல்" கொள்கையின் கீழ் வாங்கப்பட்டுள்ளது, இதற்கான வெடிபொருட்கள் துவக்க காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு பின்பு இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
நீர்மூழ்கி போர் நடவடிக்கை முறையில் "தி மரீச" சிஸ்டம் உள்நாட்டிலேயே DRDO-வால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. "தி மரீச்" சிஸ்டம்ஸ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட், என பெங்களூரில் இருக்கும் நிறுவனத்தில் ₹850 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படுகிறது.
கொள்முதல் இடைவெளியை நிறப்புவது துவங்கி இராணுவ வீரர்களின் மன உறுதியை ஊக்குவிப்பது வரை மோடி அரசு வீரத்திற்கான சகாப்தத்தை பெரும் முயற்சியின் விளைவாய் உருவாக்கியுள்ளது. தமிழ் பெண் திருமதி.நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து இந்தியாவின் பாதுகாப்புத்துறை கொடிகட்டிப் பரப்பது ஒவ்வொரு தமிழனுக்கு பெருமை தானே?
The article is translated with minor edits from The True Picture website.
Next Story