Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி? 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்!

ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி? 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்!

ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி? 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2018 4:19 PM GMT

2014-ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல்லா குட்டி என்பவர், தற்போதைய கேரள முதல்வர் பினராயி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது, "எதிரிகளை வங்காள முறையில், ரத்தம் சிந்தப்படாமல் கொன்று குவிக்க வேண்டும். எதிரிகளை உப்பு அடங்கிய சாக்கு மூட்டையில் அடைத்து, ஆழமான சாக்கடைக்குள் போட்டு விட வேண்டும். அப்படி செய்தால், ரத்தம் இல்லாமல், எந்த தடையமும் இல்லாமல் வங்காள முறையில் கொன்று விடலாம்", என்று தற்போதைய கேரள முதல்வர் பினராயி கூறியதாக அப்துல் குட்டி 2008-இல் கூறினார் என்று இந்தியா டுடே
செய்தி
வெளியிட்டிருந்தது.
அப்போது கம்யூனிஸ்டுகள் நடத்திய கொலை வெறியாட்டத்தின் புகைப்படங்களை, அப்போது பா.ஜ.க நாடாளுமன்றத்தில் சமர்பித்ததை அடுத்து பினராயி இவ்வாறு கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அப்துல்லா குட்டி என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது, கண்ணூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி-யாக இரு முறை இருந்தவர். 2009-ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி அரசு செய்த சாதனைகளை பற்றி பேசியதால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க்கப்பட்டார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, 2009 மற்றும் 2011 தேர்தல்களில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேந்தெடுக்கப்பட்டார்.
எனினும் அப்துல்லா குட்டி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தது அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) கட்சி. கேரள மாநிலத்தில், கடந்த 17 ஆண்டுகளில் மொத்தம் 172 அரசியல் கொலைகள் நடந்துள்ளது என்று தி நியூஸ் மினிட் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. அதில் அதிகப்படியான கொலைகள் கம்யூனிஸ்ட் அரசு கேரளாவை ஆளும் போது தான் நிகழ்ந்துள்ளது. அதிலும் அதிகப்படியான கொலைகள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூரில் தான் நிகழ்ந்துள்ளது.
தற்போது, சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, பினராயி ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் பிடிவாதம் அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது.
அமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைத்து, பிறகு காவல்துறை தடியடி நடத்தி அதன் பின்னர் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய ஹிந்து விரோத பெண்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமி சன்னதியில் நுழைய வைக்க கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க, பம்பையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை கடுமையாக தாக்கியுள்ளனர் கேரள காவல்துறையினர். அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அற வழி போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கடந்த இரு நாட்களாக பினராயி தலைமையிலான கேரள அரசின் போலீஸார் தீவிரமாக இறங்கி உள்ளனர். கடந்த இரு நாட்களில் இதுவரை 452 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 2,300 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இதில் 700 பேர் மட்டும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி இந்து
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றம் பினராயி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக சாடியது. இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் அரசும், போலீஸாரும் இறங்கக்கூடாது. கைது நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான விளக்கம் தேவை.
போராட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள் என்று உறுதி செய்தபின்பு தான் போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். அதைவிடுத்து அப்பாவிகளையும், போராட்டத்தில் பங்கேற்காதவர்களையும் கைது செய்தால், அரசு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்", என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்தியாவிலேயே எங்கும் காணப்படாத கொடுமை ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வெளி வர ₹10,000 முதல் ₹13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மனோரமா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சென்ற சர்ச்சைக்குரிய பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த அற போராட்டத்தில் பங்கு பெற்றவரின் வீடு மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. இது குறித்த மனரோமா செய்தி வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில்
, கேரள மாநிலம் மல்லபுரத்தில் உள்ள ஐயப்ப பக்தரின் வீடு சூறையாபடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கம்யூனிஸ்டடுகளின் வெறியாட்டமாய் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறை மூலம் கைது, கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வெளிவர கடுமையான தொகை, வன்முறை வெறியாட்டம் போன்ற அனைத்து விதமான தாக்குதலையும் தங்கள் மீது பினராயி தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் தொடுத்துள்ளதாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News