Kathir News
Begin typing your search above and press return to search.

போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக்! மூக்குடைக்கப்பட்ட போலி போராளிகள்.

போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக்! மூக்குடைக்கப்பட்ட போலி போராளிகள்.

போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக்! மூக்குடைக்கப்பட்ட போலி போராளிகள்.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2018 2:43 AM GMT

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் இருக்கும் பெயர் பலகைகளில் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது கடும் விமர்சனத்தை சந்தித்தது. தற்போது இது போலி செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது பெயர்பலகையே இல்லை மாறாக வெள்ளை காகிதத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் என்பது புகைப்படத்தை பார்த்தால் தெளிவாகிறது.

இந்த போலி புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து வந்தனர். இந்த ஹேஷ்டேக்கை மெனக்கெட்டு முழுநேரம் பயன்படுத்தியவர்கள் பெரும்பாலும் பா.ஜ.க வெறுப்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் பலகையில் பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் இது குறித்து சிலையை நிறுவிய சர்தார் சரோவர் நர்மதா நிகத்தின் உயர்மட்ட அதிகாரி கூறுகையில், "தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும் பெயர் பலகை கொண்ட புகைப்படம் போலியானது என்றும், அத்தகைய பெயர் பலகை சிலை வளாகத்தில் எந்த இடத்திலும் இல்லை" என்றும் உறுதிபடுத்தியுள்ளார்.
நிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் இந்திய அரசின் திட்டம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், இவ்வாறு இருக்கும் பலகைகளே நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பலகைகள் என்றும், பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டும் பழக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் இது விஷமிகளால் பரப்பப்பட்ட போலி செய்தி என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
போலி செய்திகளின் புகழிடம் ஆகிறதா சமூக ஊடகங்கள் என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
Article Inputs from Indian Express
Next Story
கதிர் தொகுப்பு
Trending News