Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் காங்கிரசும், குமாரசாமி கட்சியும் சேர்ந்து ₹410 கோடி ஊழல் : சமூக தணிக்கை கணக்குகள் ஆய்வில் அம்பலம்

கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் காங்கிரசும், குமாரசாமி கட்சியும் சேர்ந்து ₹410 கோடி ஊழல் : சமூக தணிக்கை கணக்குகள் ஆய்வில் அம்பலம்

கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் காங்கிரசும், குமாரசாமி கட்சியும் சேர்ந்து ₹410 கோடி ஊழல் : சமூக தணிக்கை கணக்குகள் ஆய்வில் அம்பலம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2018 1:40 AM GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் - குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இரு கட்சிகள் மீதும் தினமும் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டு வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ₹410 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக தணிக்கை கணக்குகள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மாநிலத்தில் 467 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்ற ஊரக வேலைவாய்ப்பு பணிகளை முதல்கட்டமாக ஆய்வு செய்தபோது ₹37.68 அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் 92,000 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ₹373 கோடி மதிப்புள்ள முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த ஊழல் நடைபெற்று வந்துள்ளது என்றும், வேலை நடைபெறாமலேயே பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்ளுதல், ஒரே வேலையை செய்துவிட்டு இரண்டு முறை பில் போட்டு பணம் பெறுதல், போலி பணி அட்டைகள் மூலம் பணம் வாங்குதல், ஒரு நாள் கூலி பணம் ₹236-க்கு பதிலாக மிகவும் குறைந்த தொகையை கொடுத்தல், வங்கிகள் மூலம் அளிக்காமல் கூலியை நேரடியாக கொடுத்தல் போன்ற முறைகேடான செயல்கள் மூலம் இவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மோடி சர்க்கார் 100 நாட்களுக்கும் கூடுதலாக 150 நாட்கள் வேலை தருகிறது. ஏழைகளுக்கு தரும் இந்த பயன்களை காங்கிரசாரும், குமாரசாமி கட்சியினரும் பயன்படுத்தி வறிய மக்களின் வயிற்றை அடித்து வரும் தகவல்கள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஊழல் விவகாரத்தில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ராமநகர மாவட்டத்தின் சென்னபட்னா மற்றும் கனகபுரா தாலுகாக்களில் அதிக அளவு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னபட்னா மாநில முதல்வர் குமாரசாமியின் சட்டசபை தொகுதியாகும். கனகபுரா தொகுதி நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் தொகுதியாகும். ஒரு முதல்வரின் தொகுதியில் அதிக முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் காங்கிரஸ் – குமாரசாமி கட்சி கூட்டணி குறித்து சந்தி சிரிக்கிறது.

கிராமப்புற பகுதிகளில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், அரசியல் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் ஊழலைத் தடுக்க சமூக ஆய்வு குழுவை அமைத்து ஒருங்கிணைத்து செயல்படுகின்றனர். சுயேட்சையான அந்த அமைப்புகள் மூலமாக இந்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த பா.ஜ.க ஆட்சியில் இது போன்ற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் பல பண்ணை குட்டைகள், நீர்நிலை பராமரிப்பு பணிகள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டதாகவும், ஏழை மக்களுக்கு முறையாக வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News