Kathir News
Begin typing your search above and press return to search.

பாலம் வர சாத்தியமே இல்லை என்று உதறி தள்ளிய தி.மு.க : உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது - சரித்திரம் பேசும் பொன்னாரின் சாதனை

பாலம் வர சாத்தியமே இல்லை என்று உதறி தள்ளிய தி.மு.க : உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது - சரித்திரம் பேசும் பொன்னாரின் சாதனை

பாலம் வர சாத்தியமே இல்லை என்று உதறி தள்ளிய தி.மு.க : உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது - சரித்திரம் பேசும் பொன்னாரின் சாதனை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2018 4:55 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது பெரிய நகரம் மார்த்தாண்டம். இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.
இந்த மேம்பாலம் நவீன தொழில்நுட்பத்தில் மேலைநாட்டு உயர் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தூண்களை தாங்கும் அடிப்பகுதியில் உள்ள பியரிங் எனும் அமைப்பு, பாலத்தின் உயரம், எடைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும். இவை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. சர்வதேச தரம்
வாய்ந்தவை
.
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 9.5 மீட்டர். குறைந்தபட்ச உயரம் 2.5 மீட்டர். பாலத்தில் உயரம் குறைந்த பகுதிகளில் அதிர்வு குறைவாக இருக்கும். ஆனால் உயரம் அதிகமான பகுதியில் அதிர்வை சற்று அதிகமாக உணர முடியும். இது போன்ற அதிர்வு எல்லா பாலங்களிலும் இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் பாலம் விரிசல் கண்டுவிடும். இது இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் மிகவும் உறுதியானது.
இந்த பாலம் குறித்து சில வருடங்களுக்கு முன்பு அறிக்கை விட்ட அப்போதைய கன்னியாகுமரியின் பாராளமன்ற உறுப்பினர் தி.மு.க-வை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் “மார்த்தாண்டத்தில் பாலம் வர சாத்தியமே இல்லை” என திட்டவட்டமாக கன்னியாகுமரி மக்களின் கோரிக்கையை மறுத்து வந்தார்.
தற்போது பணிகள் முடியும் தருவாயில் இரு பாலங்களிலும் கனரக வாகனம் அனுமதிக்கப்படுவதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய பாலங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது தங்களுக்கு பேருதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டதை விட முன்கூட்டியே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. இரு பாலங்களும் தென் இந்தியாவில் முதன் முறையாக இரும்பால் கட்டமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தி காட்டிய இந்த சாதனையை சரித்திரம் பேசும்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News