Kathir News
Begin typing your search above and press return to search.

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Jan 2019 2:21 PM GMT

அத்துமீறி ஐயப்பன் கோவிலுக்குள் கடந்த 2-ஆம் தேதி நுழைந்த 2 மாவோயிஸ்ட் பெண்களால் கடந்த 2 வாரங்களாக கேரளாவில் பதட்டம் ஏற்பட்டது. பாரம்பரியம்மிக்க கோவிலுக்கு முதன்முறையாக 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவரும் சென்றதைக் கண்டித்து இந்து அமைப்பினரும் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர், ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக பா-.ஜ.கவினரும் களத்தில் இறங்கினர்.
மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் ஒருவர் கம்யூனிஸ்டுகளின் சபரிமலை பாதுகாப்பு சமிதியை சேர்ந்த ஒருவர் கல்வீச்சு சம்பவத்தில் உயிர் இழந்தார். பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும், பா.ஜ.க பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் எறிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்குள் புகுந்த 39 வயதான கனகதுர்கா என்ற பெண் மீது அவரது சொந்த ஊரில் இருந்தவர்கள் கோபமாக இருந்தனர். அவர் ஊருக்குள் நுழையாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வீட்டுக்கு திரும்பிய கனக துர்காவை வீட்டுக்குள் நுழைக் கூடாது என அவரது மாமியார் கூறியுள்ளார். உள்ளே நுழைந்த அவரை மாமியார் பிரம்பால் பலமாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அந்த பெண் கூறுகையில் "கோவில் சம்பவத்துக்குப் பிறகு இரு வாரங்களுக்குப் பின் தாம் வீடு திரும்பிய போது, தமது மாமியார் பிரம்பால் 10, 12 முறை பலமாக அடித்து விட்டதாக கூறியுள்ளார். தம்மை பிடித்து இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை மூடிவிட்டதாகவும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்" கனகதுர்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News