Kathir News
Begin typing your search above and press return to search.

"மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான்" : ட்விட்டரில் SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

"மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான்" : ட்விட்டரில் SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான் : ட்விட்டரில் SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jan 2019 1:38 PM GMT

சோனியா காந்தியின் மகளான பிரியங்கா வட்ராவுக்கு காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இடம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள வாரிசு அரசியலை உலக பத்திரிக்கைகள் துவங்கி பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை அடுத்து ட்விட்டரில் பா.ஜ.க இளைஞர் அணி துணை தலைவர் எஸ்.ஜி. சூர்யா-விற்கும் ஸ்டாலினின் மகன், கலைஞர் கருணாநிதியின் பேரன், மூன்றாம் கலைஞர் என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் மூண்டது.

அப்போது பதிவு செய்த எஸ்.ஜி. சூர்யா, "கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் தி.மு.க அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது'' என்று பதிவிட்டிருந்தார்.

சூர்யாவின் கருத்துக்கு பதிலலித்த மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் "நான் தி.மு.க-வின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பா.ஜ.க-வில் இணைந்து விடுகிறேன்" என்று தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு தகுந்த ஆதரங்களுடன் தக்க பதிலடி கொடுத்தார் சூர்யா.

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அறக்கட்டளைக்கு அறங்காவலராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உதயநிதி இருக்கிறார் என்ற விகடன் செய்தியையும், முரசொலி மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிட்ட தினகரன் செய்தி குறிப்புகளையும் எடுத்து காட்டியுள்ளார்.

இதற்கு உதயநிதி பதிலலிக்காததால் முரசொலி பத்திரிக்கை விழாவின் வீடியோ ஆதாரத்தையும் எடுத்து காட்டியுள்ளார் சூர்யா.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் சமாளித்துள்ள உதயநிதி, "நீங்கள் எப்போது வந்து வேண்டுமானாலும் முரசொலியின் பைலாவை படிக்கலாம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இனிமேல் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்'' எனக் கூறியதுடன் பா.ஜ.க தலைவர் தமிழிசையைக் குறிப்பிட்டு, "யாருக்கா இந்த அறிவாளி", என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து பதிவிட்ட சூர்யா, "பள்ளி பருவங்களில், மாணவர்கள் ஆசிரியையைகளிடம், மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான் என்று மாணவர்கள் கப்லைன்ட் செய்யும் சம்பவங்களை நினைவு கூறுகிறீர்கள். உங்களுடைய ஒப்புதல் படி, நீங்கள் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருக்கிறீர்கள். அது உங்களின் உழைப்பால் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை மாறாக நீங்கள் கலைஞர் குடும்பத்தில் பிறந்த காரணத்திற்காக கிடைத்துள்ளது.

தொடர்ந்து பதிவிட்ட சூர்யா, "யாருக்கா இந்த அறிவாளி?", என்ற உதயநிதியின் ஆணவ கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு நன்றாக படித்து, வாழ்வாதாரத்திற்காக கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பவன். தனது குடும்பத்தின் அரசியல் பலத்தாலும் செல்வாக்காலும் நடிகர்/அரசியல்வாதி ஆனவன் கிடையாது" என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News