Top
undefined
Begin typing your search above and press return to search.

2 ஜி வழக்கில் மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சா நினைவு நாள் இன்று!! “கூடா நட்பு கேடாய் முடிந்ததே” எனக் கூறி குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!

2 ஜி வழக்கில் மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சா நினைவு நாள் இன்று!! “கூடா நட்பு கேடாய் முடிந்ததே” எனக் கூறி குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!

SG SuryahBy : SG Suryah

  |  16 March 2019 4:49 AM GMT


சாதிக் பாட்சா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி கடந்த 18/05/2016 அன்று வெளியிட்ட தகவல்களை வைகோ மறந்திருக்கலாம். ஆனால் இந்த வையகம் மறக்காது. சாதிக்பாட்சாவின் குடும்பத்தினர் மட்டும் இந்த கொடிய சம்பவத்தை எப்படி மறந்திருக்க முடியும்.


அவருடைய இன்றைய நினைவு நாளில் செய்தி தாள்களில் இன்று அவர்கள் வெளியிட்டுள்ள நினைவு இரங்கலில் “ கூடா நட்பு கேடாய் முடியும் “ என்ற பழமொழிக்கு உதாரணமாக உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதே என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியுள்ளதை பார்க்கும் போது அனைவரின் நெஞ்சமும் வெடித்து சிதறுவதை போலிருந்தது.


அன்று வைகோ, சென்னை வழக்கறிஞர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், திமுகவினரின் பினாமி என்று கருதப்பட்டவருமான கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகி சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கைகைகளை தொடங்கியது.


இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.


இந்த நிலையில், திருச்சியில் 17 /05 /2016 அன்று திடீரென செய்தியாளர் சந்திப்பு நடத்திய, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஸ்டாலின்தான்....


இது குறித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் 18/05/2016 செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சாகித் பால்வாவிடமிருந்து வந்த பெரும்பாலான பணம் ஸ்டாலினிடம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாதிக் பாட்சாவுக்கு கிடைத்த பணத்தின் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு தரப்பட்டது. ஸ்டாலின் குறித்து சிபிஐக்கு சாதிக் பாட்சா அறிக்கை கொடுத்துள்ளார். நீரா ராடியா- கனிமொழி தொலைபேசி உரையாடலில் சாதிக் பாட்சாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபாகரன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையே. 2011ல் அரியலூரில் வைத்து இதே பிரபாகரன் என்னை சந்தித்து இந்த தகவல்களை கூறினார்.


கொலையை, தற்கொலை என்று மறைத்து நாடகம் நடந்து வருகிறது. காவல்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே சாதிக் பாட்சா மரணம் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்று கூறினார்.


இந்த நிலையில் 2016 ஜூன் 1- ந்தேதி மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பி.வி. செல்வக்குமார் தலைமையிலான வழக்குரைஞர்கள் குழு தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தலைமையகத்தில் நேரில் மனு அளித்தது.


இதுகுறித்து பி.வி.செல்வக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.


 அந்த வழக்கில் தொடர்புடைய ஆ.ராசாவின் நெருங்கிய நண்பராகவும், க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தவர் சாதிக் பாட்சா. 2011ஆம் ஆண்டில் அவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.


அந்தச் சம்பவத்தை விசாரித்த சிபிஐ, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அந்த விவகாரத்தை முடித்துக் கொண்டது.


இந்த நிலையில், "சாதிக் பாட்சா தற்கொலை செய்யவில்லை. நாங்கள்தான் கொலை செய்தோம்' என்று அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த கே.பிரபாகரன் என்பவர் மே 17-இல் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


மேலும், ராசாவின் நெருங்கிய உறவினர் பரமேஷ்குமார், தமிழக உளவுத் துறை முன்னாள் உயரதிகாரி ஜாஃபர் சேட் ஆகியோருடன் தானும் சேர்ந்து சாதிக் பாட்சாவை கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக பேட்டியில் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் சாதிக் பாட்சா மரணம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறையும், சென்னை காவல் ஆணையரும் இணைந்து மறு விசாரணை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். எங்கள் மனுவுக்கு உரிய பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சாதிக்பாட்சா மட்டுமல்ல யார் யாரெல்லாம் ஸ்டாலினின் கறை படிந்த கரங்களை முழுக்க தெரிந்து வைத்திருந்தினரோ அவர்கள் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்கு முன்பு அண்ணாநகர் ரமேஷ் மர்ம மரணம் , கே.கே.நகரை சேர்ந்த திமுக பெண் நிர்வாகியின் துப்பு துலக்கப்படாத கொலை அனைத்திலும் உள்ள உண்மைகள் வெளியே வந்தால் அந்த கட்சியிலும், தமிழக அரசியலிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.


Next Story