Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜனதா முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

பா.ஜனதா முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

பா.ஜனதா முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 April 2019 12:38 PM GMT


பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகியது.
இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி வரலாற்றில் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 2014 தேர்தலில் பா.ஜனதா 428 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.


தற்போது 17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான தேர்தல் பிரசராத்தை மேற்கொண்டு வருகின்றன.
இப்போது இதுவரையில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. “இன்னும் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம்,” என பா.ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.


1999 தேர்தலில் 339 இடங்களிலும் , 2004 தேர்தலில் 364 இடங்களிலும், பா.ஜனதா 2009 தேர்தலில் 433 இடங்களிலும் போட்டியிட்டது. மொத்த நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 543 ஆகும்.


டெல்லியில் உள்ளூர் பா.ஜனதா வார்த்தை மோதல் மற்றும் காங்கிரஸ்-ஆம் ஆத்மி வியூகம் நிலுவை காரணமாக பா.ஜனதா 7 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை.


மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், உ.பி.யில் 8 தொகுதியிலும், வேட்பாளரை அறிவிக்கவில்லை. பஞ்சாப்பில் 3 தொகுதிகளுக்கும், அரியானாவில் இரு தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் ஒரு தொகுதிக்கும் பா.ஜனதா வேட்பாளரை அறிவிக்க வேண்டியது உள்ளது.


ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணியில்லாமல் 42 தொகுதிகளில் பா.ஜனதா தனியாக களமிறங்குகிறது. அசாம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கூட்டணி காரணமாக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது.


ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களிலும் பா.ஜனதா அதிகம் கவனம் செலுத்துகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News