Top
undefined
Begin typing your search above and press return to search.

#KathirOpinionColumn : பார்புகழும் பார்ப்பனர்களை பாதுகாப்போம் !

#KathirOpinionColumn : பார்புகழும் பார்ப்பனர்களை பாதுகாப்போம் !

SG SuryahBy : SG Suryah

  |  9 May 2019 6:08 PM GMT


பார்ப்பனர்களை ஒழித்தால் உலகின் உச்சமான பண்பாடு, கலச்சாரத்தை ஒழித்துவிடலாம் என்று நீங்கள் நினைக்கும் போது தான் பார்ப்பனன் உண்மையாகவே இறுமாப்பின் உச்சத்துக்கு போகிறான்.


பிராமணன், அந்தனன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்கள் கட்டிக்காக்கும் தர்மபரிபாலனத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு.


சென்னையில் திருட்டு வி.சி.டி விற்கும் 1000 பேரை காட்ட முடியும். ஒரே ஒரு பார்ப்பானை காட்ட முடியுமா?! ஒரு பார்ப்பணினிடம் சென்று, "நீ ₹100-க்கு திருட்டு விசிடி வித்துட்டு வா உனக்கு ₹1000 தர்றேன்னு", சொல்லி பாருங்கள். அப்படியாவது உங்களால் ஒரு பார்ப்பானை மோசமான தொழிலுக்கு திருப்ப முடிகிறதா என்று பாருங்கள்... முடியாது... ஏனென்றால் திருட்டு விசிடி விற்க்கலாம் என்ற நினைப்பே அவனை கூனிகுறுக வைத்துவிடும்.
மயிலாப்பூர், மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற பகுதிகளில் ஏகப்பட்ட கேட்டரிங் வேலைகளை எடுத்து செய்பவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள்.


கொஞ்சம் கொச்சையா சொல்ல வேண்டும் என்றால் சமையல்காரர்கள். அவர்களிடம் சென்று திருட்டு செல்போனை வாங்கி விற்க்கலாம், என்னோட பார்ட்னராக வாருங்கள் என்று அழைத்து பாருங்கள், பதில் என்னவாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். சென்னை பர்மாபஜாரில் திருட்டு செல்போனை விற்பதையே தொழிலாக வைத்திருக்கின்றனர் சிலர்.


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு வள்ளுவன் யாரை கூறினான் என்று இப்போது புரிகிறதா?!
பார்ப்பனன் படிக்காமல் கூட இருப்பான். ஆனால் பண்பை இழந்து இருக்க மாட்டான் என்பதை புரிய வைக்கத்தான் இந்த உதாரணங்கள். எங்கேயும் சென்று குண்டு வைக்க மாட்டான்.


பண்பாட்டை, தர்மத்தை கட்டி காப்பது பார்ப்பனர்கள் தான். அதனால் தான் அவர்களை அழிக்க வேண்டும் என்று பலரும், அவர்களின் வெளிநாட்டு எஜமானர்களும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.
தமிழக பார்ப்பனர்கள்


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வலுபெற்ற பார்ப்பன எதிர்ப்பு மனோபாவம் நம்மிடையே இன்னும் கூட இருக்கிறது. வலுவான ஒரு கும்பல் பிராமண எதிர்ப்பை முன்னெடுத்த போது, இன்று வரை பிராமண தரப்பு வாதங்களை யாரும் முன் வைக்காதது வருந்ததக்கது. ஆனால் உலகின் பல்வேறு மூலைகளில் இங்கிருந்து விரட்டப்பட்ட பிராமணன் கோலோச்சுகிறான்.


பார்பனர்களில் திருடன் இல்லை, கொள்ளைக்காரன் இல்லை, கஞ்சா வியாபாரி இல்லை, திருட்டு விசிடி இல்லை, தங்கம்-போதைமருந்து கடத்தல் இல்லை. படிப்பு, உழைப்பு, புத்திசாலித்தனம், நேர்மை இவையே பார்ப்பனர்களின் மூலதனமாக உள்ளவை.


சாஃப்ட்வேர் என்ஜினியர், பெரும் நிறுவனங்களின் தலைமை பதவிகள், வங்கி ஊழியர், அக்கவுண்டட், கிளர்க், கோவில் பூஜாரி, வைதீக காரியங்கள், சமையல்காரன், வெளிநாட்டில் வேலை என பாசிடிவான வேலைகளை மட்டுமே செய்யும் சமூகமும் பார்ப்பன சமூகம் தான்.


63 நாயன்மார்களிலும், 12 ஆழ்வார்களிலும் அனைத்து ஜாதிகளை சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் தான் இன்றும் மயிலை 63வது விழாவின் நாயகர்கள். அதில் கண்ணப்ப நாயனார் வேடன், பரஞ்ஜோதி உட்பட 11 பேர் வன்னிய சமூகம். குயவர், செட்டியார், பிராமணர், முதலியார் என அனைத்து சமூகங்களிலும் நாயன்மார் உள்ளனர்.


வேதங்களை தொகுத்தளித்த வியாசன் பார்ப்பனன் இல்லை. அவன் ஒரு மீனவ பெண்ணின் மகன். கீதையை அருளிய கிருஷ்ண பரமாத்மா ஒரு யாதவன், ஈசன் ஒரு எஸ்.சி, ராமன் ஷத்திரியன்,
கிருஷ்ணன் யாதவன். இவர்களை தூக்கி பிடிப்பது பிராமணர்கள்.


அவர்கள் தமிழக பக்தி இயக்கத்தை வழி நடத்தியவர்கள். பெரிய புராணம் அவர்களின் பெருமையைத்தான் பாடுகிறது. ஆக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை இல்லாத ஏற்றத்தாழ்வுகள் இங்கே விதைக்கப்பட்டன என்பது தெளிவு.


உஞ்ச விருத்தி பிராமணன் என்பார்கள். பாரதியை பாருங்கள். அவன் அதிகார பிச்சையில் வாழ்ந்தவன். கொடுக்க முடியாத வீட்டு வாடகையை கூட பிறகு தருகிறேன் ஓய் என அவனால் தான் மிடுக்குடன் கூற முடியும். மிகச்சிறந்த பிராமண சாணக்யன் மாபெரும் மகதப் பேரரசை உருவாக்கியவனாக இருந்தாலும், தனது வாழ்க்கையின் கடைசி நொடி வரை குடிசையில் வாழ்ந்தான். பிச்சை எடுத்து தான் தின்றான் என்கிறது அவனது வரலாறு. பிராமணன் அறிவின் அடையாளம், வாழ்க்கையின் வழிகாட்டி. உ.வே.சா என்ற பிராமணன் ஊர் ஊராக மாட்டு வண்டியில் சென்று கண்டெடுத்த பொக்கிஷங்கள் தான் இன்று நாம் படிக்கும் சுமார் 60 காப்பியங்கள்.


தமிழ் தாத்தாவின் அந்த தமிழ் பற்றும், தமிழுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்ற தவமும், ஆதங்கமும் தான் பிராமணனின் தன்மை. மாறாக தமிழுக்காக தன்னை அர்ப்பணம் செய்வதாக, செய்ததாக கூறும் எவனும் எதுவும் செய்ததாக தெரியவில்லை. பிராமணனை துவேஷம் செய்து அதில் லாபம் அடைந்தவர்கள் மட்டுமே.


சமுதாயத்தின் அறிவுக்கண்ணை திறப்பவன் அனைவரும் பிராமணனே. மாற்று மத மத-வெறியர்களுக்கு பிராமணன் தான் இந்து சமுதாயத்தின் ஆணிவேராக செயல்படுகிறான் என தெளிவாக தெரியும்.


இந்தியாவை அசைக்க வேண்டுமென்றால் பிராமணன் என்ற ஆணிவேர் பிடுங்கப்பட வேண்டும் என்ற வேகம் மத வெறியர்களிடம் இருப்பது தெளிவு. இதன் வெளிப்பாடு தான் பிராமணப் பெண்களை குறிவைக்கும் லவ் ஜிகாத் போன்றவை. இன்று பிராமணன் ஒரு ஜாதியாக பார்க்கப்பட்டு அவன் அழிக்கப்பட்டால் இந்து சமுதாயத்தை அழித்து விட முடியும் என்ற பத்தாம்பசலி கற்பனை மதவெறி மங்குனிகளுக்கு இருக்கிறது. உண்மை என்னவென்றால் பிராமணனின் தன்மை கொண்ட 1000 புதியவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது. பிராமணன் சத்தியமாக அழியப்போவதில்லை.
சூரிய சங்திரர் உள்ளவரை கம்பீரமாக வாழ்வார்கள். தெய்வம் காக்கும் .🙏


-@umagarghi


குறிப்பு : இந்த கட்டுரை முழுவதும் @umagarghi என்பவரின் ட்விட்டர் பதிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது. கட்டுரையின் கருத்துகளுக்கு கதிர் இணையதளம் பொறுப்பாகாது.


Next Story