Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் ! மம்தா அரசுக்கு எச்சரிக்கை ! உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் !!

மேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் ! மம்தா அரசுக்கு எச்சரிக்கை ! உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் !!

மேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் ! மம்தா அரசுக்கு எச்சரிக்கை ! உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2019 5:28 AM GMT



பங்களாதேஷிலுள்ள ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) என்கிற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் மேற்கு வங்கத்தில் பர்த்வான் மற்றும் மூர்ஷிதாபாத் பகுதிகளில் உள்ள மதரஸா பாடசாலைகளை தங்கள் பயங்கரவாத நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.


பங்களாதேஷிலுள்ள ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) என்கிற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க எல்லைபுற பகுதிகளில் பயங்கரவாதிகளை உருவாக்கும் முகாம்களை உருவாக்கியுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.


மேற்கண்ட இடங்களை பயங்கரவாதிகள் தங்கள் பதுங்கும் இடங்களாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதற்கான புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவும் அவர்களை எல்லைபகுதிகளில் பணியமர்த்தவும் செய்கின்றன. இதற்கான நெட்வொர்க் பணிகள் மேற்கு வங்கத்தில் உள்ள மூர்ஷிடாபாத், மால்டா, நாடியா மாவட்ட பகுதிகள் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அஸ்ஸாம் பகுதிகளிலும் நடந்து வருகின்றன. அந்த பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் மதரசாக்கள் மூலமே மேற்கண்ட பயங்கரவாதிகள் இயக்கம் உதவிகளை பெறுகின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.


ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என சென்ற மே மாதம் 23 ஆம் தேதியே மத்திய அரசு அறிவித்தது. சென்ற 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ந்தேதி பர்த்வான் மாவட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரனையின்போது கிடைத்த தகவல்களைக் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கரவாதிகளை மற்றும் பயங்கரவாதத்தை உருவாக்கும் இயக்கங்கள் இருப்பதும் அவற்றுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இருப்பதும் என்பது தெரிய வந்துள்ளது.


மேற்கண்ட குண்டுவெடிப்பில் பலியான சகில்காசி என்பவன் ஜமாத் - உல் - முஜாஹிதீன் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் என்பதும் இந்த இயக்கத்தின் நோக்கம் பங்களாதேஷில் உள்ள ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அங்கு ஷரியா அரசு ( இஸ்லாமிக் அரசு ) அமைப்பதை குறிக்கோளாக கொண்டது என்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு கிடைத்த தகவல்களாகும்.


பங்களாதேஷில் உள்ள தீவிரவாத இயக்கங்களால் மேற்கு வங்கத்தில் அனுமதியில்லாத மதரஸாக்கள் காளான்கள் போல பரவி வளர்வதாகவும் தேசிய புலனாய்வு முகமை ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளது.


சென்ற 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணைகளின் போது பல மதராஸாக்கள் NIA, NSG, IB ஆகிய இந்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும், அப்போது பர்த்வான் காவல் நிலைய எல்லைபகுதியில் உள்ள சிமுலியா மதரஸா, மூர்ஷிடாபாத் மாவட்டம் முகீம் நகரில் உள்ள லால்கோலா மதரஸா ஆகியவை குறித்து அறியப்பட்டதில் பயங்கரவாதிகளின் நெருங்கிய தொடர்பு அறியப்பட்டுள்ளது.


ஜமாத் - உல் - முஜாஹிதீன் இயக்கம் பங்களாதேஷில் தனது செயல்பாடுகளை கடந்த October 2011 லிருந்தே தொடங்கி விட்டதென்றும் இதன் உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவி ஆங்காங்கு உள்ளூர் செல்வாக்கு பெற்று வளர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜமாத் - உல் - முஜாஹிதீன் இயக்கம் பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வேலையற்ற முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து மேற்கு வங்க எல்லைகளில் தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.


ஜமாத் - உல் - முஜாஹிதீன் இயக்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு பர்த்வானில் நடத்திய தாக்குதலைப் போன்றே அதே ஸ்டைலில் தலாய்லாமா கூட்டத்தின்போது பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் ஜி.கே.ரெட்டி பதில் அளிக்கையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன்பும், பின்பும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து மாநில அரசிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசுக்கு பாதுகாப்பு குறித்து கடந்த ஜூன் 9 ந்தேதி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Source : https://www.opindia.com/2019/07/mha-reveals-madrasas-are-being-used-to-radicalise-and-recruit-terrorists-in-west-bengal/


Next Story
கதிர் தொகுப்பு
Trending News