Kathir News
Begin typing your search above and press return to search.

அமர்நாத் செல்லும் இந்து யாத்ரீகர்களால் காஷ்மீரிகளுக்கு தொல்லை என கூறுவதா ? மெஹபூபாவுக்கு வலுக்கும் கண்டனங்கள் !!

அமர்நாத் செல்லும் இந்து யாத்ரீகர்களால் காஷ்மீரிகளுக்கு தொல்லை என கூறுவதா ? மெஹபூபாவுக்கு வலுக்கும் கண்டனங்கள் !!

அமர்நாத் செல்லும் இந்து யாத்ரீகர்களால் காஷ்மீரிகளுக்கு தொல்லை என கூறுவதா ? மெஹபூபாவுக்கு வலுக்கும் கண்டனங்கள் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2019 9:17 AM GMT



காஷ்மீர் மாநிலத்தில் 3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் லிங்கத்தை கண்டு தரிசிப்பதற்காக இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்து கொண்டுள்ளனர். அமர்நாத் பயணம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இவ்வாண்டு மக்கள் பயணம் தொடங்கியது முதல் 36,309 பேர் அமர்நாத்துக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிரமமின்றியும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு வசதியாக, ஜம்மு_ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், அவசரகால வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சில நேரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அமர்நாத் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளின் வாகனங்கள் சென்ற பிறகே, மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பக்தியின் பெயரால் அமர்நாத் செல்பவர்களால் காஷ்மீர் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அம் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக அமர்நாத் பயணம் நடைபெற்று வருகிறது. இது காஷ்மீரிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் பக்தியின் பெயரால் அமர்நாத் செல்லும் இந்து பயணிகளால் காஷ்மீரிகளுக்கு தொல்லை என மெகபூபா குறிப்பிட்டுள்ளதை நாடு முழுவதும் உள்ள அமர்நாத் பக்தர்கள் மற்றும் இந்து உணர்வாளர்கள் கண்டித்துள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News