Top
undefined
Begin typing your search above and press return to search.

வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதான்!! அக்குவேறு..ஆணிவேராக புட்டு...புட்டு வைத்தார்!!

வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதான்!! அக்குவேறு..ஆணிவேராக புட்டு...புட்டு வைத்தார்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  22 July 2019 12:23 PM GMT


வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ.193 கோடியே 95 லட்சத்து 71ஆயிரத்து 347.85 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.


ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 22கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
இதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.24கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193, நகைகள் ரூ. 78லட்சத்து 66 ஆயிரத்து 500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29ஆயிரத்து 543.22, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614, காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம்,இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014, நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100அடங்கும்.
விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும்,அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story