Kathir News
Begin typing your search above and press return to search.

“கலாம் என்றால் கலகம்” என்றவர்கள், “கலாம் வழி நடப்போம்” என்கிறார்கள்! தி.மு.க.வின் பித்தலாட்டம் அம்பலம்!!

“கலாம் என்றால் கலகம்” என்றவர்கள், “கலாம் வழி நடப்போம்” என்கிறார்கள்! தி.மு.க.வின் பித்தலாட்டம் அம்பலம்!!

“கலாம் என்றால் கலகம்” என்றவர்கள், “கலாம் வழி நடப்போம்” என்கிறார்கள்! தி.மு.க.வின் பித்தலாட்டம் அம்பலம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2019 7:35 AM GMT



முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.


அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை 9 மணியளவில் அப்துல்கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் மற்றும் அவரது மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத் உள்பட குடும்பத்தினர், அப்துல் கலாம் சமாதி முன்பு அஞ்சலி செலுத்தினர்.





இந்த நிலையில் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த செய்தியில், “நவீன அறிவியல் நாயகன் அப்துல் கலாமின் நினைவுநாள் இன்று! தமிழும், அறிவியலும் அவர் இரு கண்கள். இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள். அவர் விரும்பிய மனித சமுதாயம் அமைக்க உறுதியேற்போம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கலாம் வழி நடப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/mkstalin/status/1154989139671932928



அப்துல் கலாம் 2-வது முறையாக மீண்டும் ஜனாதிபதி ஆகும் அரிய வாய்ப்பை பா.ஜ.க. ஏற்படுத்தியது. கலாமை மீண்டும் ஜனாதிபதி ஆகாமல் தடுத்தது தி.மு.க. அதோடு நில்லாமல், “கலாம் என்றால் கலகம்” என்று மனசாட்சியே இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசனம் பேசியவர் அன்றைய தி.மு.க. தலைவர் கருணாநிதி.


இதேபோல பச்சை தமிழரான மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தவரும் இதே கருணாநிதிதான்.
கடந்த, 1996-ஆம் ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத இடதுசாரிகள் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இணைந்து உருவான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஐக்கிய முன்னணியில் தி.மு.க. - த.மா.கா. - தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.


அப்போது, இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் டில்லியில் கூடி, யாரை பிரதமராக தேர்வு செய்வது என ஆலோசித்தனர். முதலில் வி.பி.சிங்கை பரிசீலிக்க, உடல்நிலையை காரணம் கருதி அவர் மறுத்து விட்டார். பின்னர் மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை தேர்வு செய்ய, அவருக்கு விருப்பம் இருந்தும் அவரது மார்க்சிஸ்ட் கட்சி அதை தடுத்து விட்டது.


பிரதமர் பதவிக்கு மூன்றாவதாக பரிசீலிக்கப்பட்டவர் த.மா.கா. தலைவர் மூப்பனார். எளிமையும், அமைதியும் கொண்ட மூப்பனாரை எல்லா கட்சிகளும் ஆதரிக்க முன் வந்தன. ஆனால், “மூப்பனாரை பிரதமராக்கி விட்டு, அவர் தமிழகம் வரும்போது, விமான நிலையத்தில் காத்துகிடந்து நான் வரவேற்பதா?” என்று தடுத்து தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்தார் கருணாநிதி.


அதுபோலத்தான் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பையும் கெடுத்தவர் அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி.


இன்று அதே தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின், “கலாம் வழி நடப்போம்” என்கிறார்.


தமிழர்களும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News