Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா சுட்டுக்கொலை! - அமெரிக்க உளவுத்துறை தகவல்!!

சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா சுட்டுக்கொலை! - அமெரிக்க உளவுத்துறை தகவல்!!

சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா சுட்டுக்கொலை! - அமெரிக்க உளவுத்துறை தகவல்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2019 7:13 AM GMT



சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ஆம் தேதி, அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தது. அல்கொய்தா முஸ்லிம் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் இந்த தாக்குதலை நடத்தினான்.





இதனைத்தொடர்ந்து, பின்லேடனை தேடும் வேட்டையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பில்லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது.


இதையடுத்து தனது தந்தையை கொன்ற அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என்றும், மேலும் சில நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் வீடியோக்களை வெளியிட்டு கொக்கரித்து வந்தான், ஹம்ஸா பின்லேடன்.


ஒசாமா பின்லேடனின் 20 குழந்தைகளில் 3-வது மனைவிக்கு பிறந்த மகன்தான் ஹம்ஸா பின்லேடன். இவனுக்கு 30 வயது ஆகிறது.





பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாகவும், அந்த இயக்கத்தின் முடி இளவரசராகவும் வலம்வந்த, ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.


ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன.


ஹம்ஸா பின்லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது.


இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் வெளியாக வில்லை.





இதற்கிடையே தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில், “ஹம்ஸா இறப்புக்கு அமெரிக்க ராணுவத்தின் பங்கு மிக முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளது.


இந்த செய்தி முதலில் அமெரிக்காவின் என்பிசி சேனலில் வெளியானது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் நேற்று நிருபர்கள் ஹம்ஸா பின்லேடன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில் “என்னால் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்.


https://www.ndtv.com/world-news/osama-bin-ladens-son-hamza-bin-laden-dead-say-us-intelligence-officials-report-2078465


Next Story
கதிர் தொகுப்பு
Trending News