Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: மோடி அரசுக்கு நன்றி கூறி சென்னை ஆசிரியை பைக்கில் காஷ்மீர் வரை பயணம்!! பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 9:51 AM GMT

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீருக்கு இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து உருவாக்குவதற்கும் சட்டமியற்றப்பட்டது. இந்த சட்டம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி முண்டா (45), கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பல்வேறு மாநிலங்கள் வழியாக 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனப் பயணத்தை நேற்று தொடங்கினார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இப்பயணத்தை தொடங்கிவைத்து பேசுகையில்; கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீருக்கு இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து உருவாக்குவதற்கும் சட்டமியற்றப்பட்டது. இந்த சட்டம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி முண்டா (45), கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பல்வேறு மாநிலங்கள் வழியாக 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனப் பயணத்தை நேற்று தொடங்கினார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News