Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம்! மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம்! மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம்! மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 7:44 AM GMT



நாடு முழுவதும் கடந்த 15-ஆம் தேதி, 73-வது சுதந்திரதின விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.


இதேபோல பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.


ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார். அதேபோல அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ரிபப்ளிக் டிவியில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை” என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்.





காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் குரல்கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மோடி அரசுக்கு துணை நிற்கும்போது, தி.மு.க, காங்கிரசில் உள்ள சிலர் மற்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்து இருந்தார்.


இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள தி.மு.கவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் பாகிஸ்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.





பாகிஸ்தான் ரேடியோவில் இது பற்றிய செய்தி வெளிட்டுள்ளது. பாகிஸ்தான் ரேடியோவின் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.radio.gov.pk என்ற இணையதளத்திலும் இந்தியாவுக்கு எதிரான தி.மு.கவின் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டது. அதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகிய தி்.மு.கவின் முன்னணி தலைவர்கள் அடங்கிய படத்தையும் வெளியிட்டு, பாகிஸ்தான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது.


பாகிஸ்தானின் http://www.radio.gov.pk இணையதளத்தில் இது தொடர்பாக வெயியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் 3-வது பெரிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகம், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய மோடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. புதுடெல்லியில் வருகிற வியாழக்கிழமை (இன்று) இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசால் வழங்கப்பட்டு வந்த தனி அந்தஸ்தை நீக்கியதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்” என்று குறிபிட்டு மகிழ்தது.





http://www.radio.gov.pk/20-08-2019/dmk-to-protest-against-scraping-of-special-status-of-jammu-kashmir


இந்திய அரசுக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ள செய்தியை, ரேடியோ பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு பாகிஸ்தான் மகிழ்ச்சி கடலில் திழைத்துள்ளது.




https://twitter.com/RadioPakistan/status/1163714540057612289



இந்தியாவுக்கு எதிரான தி.மு.கவின் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடந்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.


சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.


ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன், தி.க தலைவர் கி.வீரமணி போன்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.




https://twitter.com/ANI/status/1164424183213899777


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென புறக்கணிப்பு செய்துள்ளது பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News