Kathir News
Begin typing your search above and press return to search.

ஜிஎஸ்டி பற்றிய தவறான கருத்து மக்களிடம் எப்படி திணிக்கப்படுகிறது..? இந்த ஊடகங்கள் செய்யும் சித்து வேலை!

ஜிஎஸ்டி பற்றிய தவறான கருத்து மக்களிடம் எப்படி திணிக்கப்படுகிறது..? இந்த ஊடகங்கள் செய்யும் சித்து வேலை!

ஜிஎஸ்டி பற்றிய தவறான கருத்து மக்களிடம் எப்படி திணிக்கப்படுகிறது..? இந்த ஊடகங்கள் செய்யும் சித்து வேலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Sep 2019 10:44 AM GMT


ஒரு மருத்துவர் 'இதய பரிசோதனைக்கான எக்கோ ஸ்கேன் (echocardigram) இயந்திரம் வாங்கினேன். விலை 20 லட்சம். அதற்கு வரி மட்டும் 1.5 லட்சம். ஜிஎஸ்டி மட்டும் இல்லையென்றால் எனக்கு அந்த வரி பணம் மிச்சமாயிருக்கும்' என்று அரசை குறை கூறுகிறார்.


இந்த தவறான புரிதல் அதிகார பூர்வமாக ஊடகங்கள், வாட்சப், முகநூல் போன்றவற்றின் மூலம் பரப்பப்படுகிறது. ஒரு மருத்துவரின் புரிதலே அப்படியிருக்கும் போது பாமர மக்களை என்னவென்று சொல்வது.?





உண்மையில் GST, ஆதார் போன்றவை தவிர்க்க முடியாதவை, கட்சி பேதமில்லாதவை, தேச நலனுக்கானவை.


அனைத்தையும் அரசு தனக்கு இலவசமாகவோ அல்லது வரியின்றியோ தரவேண்டும் என்று மெத்தப்படித்தவர்களும் நினைப்பது வேதனைக்குரியது. கல்விக்கும் கல்வியறிவுக்கும் சம்மந்தம் இல்லை என்று நிறை மக்கள் அன்றாடம் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றனர்.


ஜிஎஸ்டி-க்கு முன் மருத்துவ கருவிகளின் வரி 13%, அதுவே 2017ஆம் ஆண்டு (ஜிஎஸ்டி-க்கு பின்) 12% ஆகா குறைக்கப்பட்டது. இன்று எக்கோ ஸ்கேன் பெற்ற மருத்துவர் 7.5% மட்டுமே வரியாக செலுத்தியுள்ளார்.


ஆதாரம் : Impact of GST on Healthcare


அதுமட்டுமல்லாமல் மருத்துவர் தனது சுய பயன்பாட்டிற்கு எக்கோ ஸ்கேன் இயந்திரத்தை வாங்கவில்லை, அதை வைத்து வர்த்தகம் செய்யும் நோக்கில் வாங்கியுள்ளார், அதாவது விலை எவ்வளவாக இருந்தாலும் அதை நோயாளிகளிடமிருந்து வசூலித்துவிடுவார். எக்கோ ஸ்கேனுக்காக இன்றைக்கு சராசரியாக இந்தியாவில் வசூலிக்கப்படும் கட்டணம் 1,500 -2000 ரூபாய்.


ஆதாரம்: 7 tests to diagnose heart diseases- The Times of India


மருத்துவம் சார்ந்த பொருட்களின் (HSN code chapter 90 of GST) மீதான வரி குறைந்து வருகிறது, விவரம் கீழே


ஆதாரம்: GST for Medical, Surgical, optical, photographic and cinematographic products


மூலம்: கார்த்திக்ராஜ் மற்றும் நாராயணன்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News