Top
undefined
Begin typing your search above and press return to search.

பெற்றோர்களின் மருத்துவ செலவிற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்அவுட்டிற்காக செலவு செய்த விஜய் ரசிகர் : தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படும் தமிழக இளைஞர்கள்

பெற்றோர்களின் மருத்துவ செலவிற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்அவுட்டிற்காக செலவு செய்த விஜய் ரசிகர் : தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படும் தமிழக இளைஞர்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Sep 2019 8:50 AM GMT


திரைப்படங்களாலும் திரைப்பட நடிகர்களாலும் தமிழக இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவது சில தசாப்தங்களாக நடந்து வருகிறது. தங்களின் திரைப்படங்கள் வெளிவரும் போது மட்டும், அரசியல் மட்டும் சமூக கருத்துக்களை கூறி இளைஞர்களை உணர்ச்சி ரீதியாக வசியம் செய்து, தங்களின் திரைப்படங்களுக்கு லாபம் ஈட்டுவது என்பது இன்றைக்கு சில நடிகர்களால் கடைபிடிக்கப்படும் யுக்தியாக இருக்கிறது. அடிப்படை ஆதாரமும் அறிவும் இல்லாமல் சில நடிகர்கள் பேசும் அரசியல் கருத்துக்களை பிரபலம் அடைய செய்ய இங்குள்ள பிரதான ஊடகங்களும் துணை போகின்றன. உணர்ச்சி பூர்வமாக நடிகர்கள் பேசுவதால் நாம் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்ற எண்ணம் தமிழக இளைஞர்கள் இடையே எழுவதில்லை. இதனை உணரச் செய்ய அறிஞர்களோ பேச்சாளர்களோ கூட முன் வருவதில்லை.


அந்த வகையில் அதிகமாக மூளைச் சலவை செய்யப்படும் இளைஞர்களில் விஜய் ரசிகர்கள் தான் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. சென்ற ஆண்டு வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தின் போது, விஜய் ரசிகர்கள் தங்கள் இல்லங்களில் உள்ள அரசாங்கம் அளித்த வீட்டு உபயோக பொருட்களை உடைத்து தள்ளிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானாது. இதில் மிகவும் பித்து பிடித்த ஒரு ரசிகர், கல்வி வளர வேண்டும் என்று அரசாங்கம் அளித்த மடிக்கணினியை போட்டு உடைத்த காணொளி பலரின் விமர்சனங்களை வரவேற்றது.
https://twitter.com/im_saiganesh/status/1060931071162773509?s=19
https://twitter.com/im_saiganesh/status/1060875104232468480?s=19


இவர்களுக்கு வேண்டுமானால் தமிழக அரசு இந்த பொருட்களை இலவசமாக வழங்கி இருக்கலாம். ஆனால் தங்கள் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி உழைத்து வாழும் தமிழர்களின் வரிப்பணத்தால் தான் இந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்களாக தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. இந்த மூளைச்சலவையை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்வது என்னவோ திரைப்பட கலைஞர்கள் தான்.
https://twitter.com/arrahman/status/1061683349050118144?s=19Source : Indian Express. Sarkar has garnered over Rs 200 crore worldwide so far.


இந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர் தமிழக இளைஞர்கள். பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.


இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நயன்தாரா உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ரசிகர்கள் 2,000 ரூபாய் வரை டிக்கெட்டிற்காக செலவழித்து, காவல்துறையிடம் தடியடியும் வாங்கியுள்ளனர்.


இதையும் படிக்க : பிகில் இசை வெளியீடு: சிறுவனிடம் டிக்கெட்டுக்கு ரூ.2000 பிடுங்கிவிட்டு துரத்தியடித்த கொடுமை! யாரை கைது செய்ய வேண்டும்? விஜய்யையா? ரசிகனையா?


இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர்கள், வலைத்தள செய்தி ஒன்றிடம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ரசிகர் ஒருவர், பெற்றோரின் மருத்துவ செலவிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து நடிகர் விஜய்க்கு கட் அவுட் வைத்ததாக கூறியுள்ளார். இதன் காணொளியை பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
https://twitter.com/prasannavishy/status/1175115665667018754?s=19
https://twitter.com/Raji_Iyer112/status/1175067864333611010?s=19
https://twitter.com/arvinth_e/status/1174913945775116288?s=19
https://twitter.com/maithriim/status/1175240092111310848?s=19


இதில் கொடுமை என்னவென்றால், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராகவும், சுபஸ்ரீயின் மரணம் குறித்தும் பேசி, இளைஞர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார் நடிகர் விஜய். ஏன் இந்த இரட்டை வேடம்? அன்றைய தினங்களில், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை வழங்கி மக்களை நல்வழிப்படுத்த உதவின. எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளத்திற்கு நல்வழி கூறி சரியாக வழி நடத்தினார்கள். ஆனால், இன்று சிலர் லாபம் ஈட்டுவதற்கு தமிழக இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். இது சில ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.


Next Story