Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் மூடப்படாது !! ஊடகங்களில் விஷமிகள் பரப்பிய செய்திகள் தவறானவை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்!!

பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் மூடப்படாது !! ஊடகங்களில் விஷமிகள் பரப்பிய செய்திகள் தவறானவை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்!!

பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் மூடப்படாது !! ஊடகங்களில் விஷமிகள் பரப்பிய செய்திகள் தவறானவை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 5:46 AM GMT


பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்திகள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி அறி வித்துள்ளது.


வாட்ஸ் அப் உட்பட சமூக ஊடகங்களில் கார்பரேஷன் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, மகாராஷ்டிரா வங்கி, ஆந்திரா மற்றும் ஓவர் சீஸ் வங்கிகள் நிரந்தரமாக மூடப்படப்போவதாக தவறான செய்திகள் வெளிவந்தன.


குறிப்பாக மும்பையிலுள்ள பிஎம்சி வங்கி ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி சில நடவடிக்கைகளை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அந்த வங்கி நடவடிக்கைக்குள்ளானது. அதனால் அந்த வங்கியின் டெப்பாசிட்டுகள் தொடர்பாக வங்கி நிர்வாகத்துக்கும் டெப்பாசிட் தாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் வங்கியின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் விஷமிகள் யாரோ ரிசர்வ் வங்கி குறித்து மேற்கண்டவாறு தகவல்களை பரப்பியதாக கூறப்பட்டது .


நிதித்துறை செயலாளர் மறுப்பு


இந்த நிலையில் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் “சில வங்கிகள் மூடப்படுவதாக பரப்பப்பட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் ஏதுமில்லை என்றும், மூடப்படுவதாக கூறப்பட்ட வங்கிகள் பெரும்பாலானவை இதர வங்கிகளுடன் இணைக்கப்பட்டவை என்றும், பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த பெரிய அளவுக்கு அரசு நிதியை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.


ரிசர்வ் வங்கி விளக்கம்


மேலும் 9 பொதுத்துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்களில் சில விஷமிகள் பரப்பிய செய்திகள் உண்மையல்ல என்றும் இவை வெறும் வதந்திகளே என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.


https://www.indiatoday.in/business/story/rbi-rejects-social-media-rumours-about-closure-of-9-commercial-banks-1603050-2019-09-25


Next Story
கதிர் தொகுப்பு
Trending News