Top
undefined
Begin typing your search above and press return to search.

'தளபதி 64' திரைப்படம் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!!

SaravanaBy : Saravana

  |  3 Oct 2019 7:53 AM GMT


விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோஇப்படத்தையும் தயாரிக்கிறார் . ஆனால் தற்போது அவர் XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார்.


இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . அனிருத் இரண்டாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் கவனிக்கிறார் .


மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு நடிக்கிறார்கள் .
விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார் .


இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பித்தது. சம்மர் 2020 - ல் வெளியாகும் என கூறப்படுகிறது.


Next Story