Kathir News
Begin typing your search above and press return to search.

95% இரயில் பெட்டிகளில் பயோ-கழிவறை! சாதனை படைத்த இந்தியன் இரயில்வே!!

95% இரயில் பெட்டிகளில் பயோ-கழிவறை! சாதனை படைத்த இந்தியன் இரயில்வே!!

95% இரயில் பெட்டிகளில் பயோ-கழிவறை! சாதனை படைத்த  இந்தியன் இரயில்வே!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 12:46 PM GMT


தூய்மை ரயில், தூய்மை பாரதம் பிரச்சாரம் ஒரு மிக பெரிய வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது. பியூஷ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் 95 சதவீத ரயில்களில் பயோ-கழிப்பறைகளை வெற்றிகரமாக நிறுவி முடித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், இந்திய ரயில்வே துறை முழுவதும் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-கழிப்பறைகள் நிறுவி முடிக்கப்படும் என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், தூய்மை இந்தியா திட்டம் கீழ் சுகாதாரம் மற்றும் பயணிகள் சேவைகள் பெரிதும் மேம்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.


இந்திய ரயில்வே முழுவதும் 70,000 ரயில் பெட்டிகளில் பயோ-கழிப்பறைகள் நிறுவப்பட்டுவிட்டன. 2,300 ரயில் பெட்டிகளில் மட்டுமே பயோ-கழிப்பறைகள் நிறுவப்பட மீதம் உள்ளன. இதற்க்கு மேலாக, தண்ணீர் சேமிப்பிற்காக, ரயில்கள் முழுவதும் உள்ள கழிப்பறைகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் அமல்படுத்துவதை நோக்கியும் ரயில்வே அமைச்சகம் வேலை பார்த்து வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News