Top
undefined
Begin typing your search above and press return to search.

“அடியாட்களை, தி.மு.க உருவாக்கி வருகிறது” - காவேரி டிவி மதன் விவகாரத்தில் தி.மு.க-வை கிழித்து தொங்கவிடும் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்!

“அடியாட்களை, தி.மு.க உருவாக்கி வருகிறது” - காவேரி டிவி மதன் விவகாரத்தில் தி.மு.க-வை கிழித்து தொங்கவிடும் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்!

SaravanaBy : Saravana

  |  8 Oct 2019 4:38 AM GMT


காவேரி தொலைக்காட்சியில் மதன் நெறியாளராக இருந்து தொகுத்து வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.


அப்போது அவரிடம் மதன் கேட்ட பல கேள்விகளுக்கு, அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். பல இடங்களில் மழுப்பினார். இன்னும் பல இடங்களில் பம்மினார்.


இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாக பரவியது.
https://twitter.com/DuraiGopal2/status/1153153273672507392?s=20


இது தி.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் மிகப்பெரிய அவமானமாக அமைந்தது.


முக்கியமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, காஞ்சிபுரம் சென்று அத்தி வரதரை வழிபட்டுவந்தது தொடர்பான கேள்வியில் சுப.வீரபாண்டியனின் பகுத்தறவு பல்லிளித்து விட்டது.


"கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொல்லி இருக்கிறார். அப்படியானால் ஸ்டாலினின் மனைவி துர்கா, அத்திவரதரை தரிசித்து வந்தது காட்டுமிராண்டித்தனம் தானே" என்பதுதான் கேள்வி.
https://twitter.com/vasanth6_7/status/1152874455850336258?s=20


இதனால் மூக்கு உடைபட்ட தி.மு.க-வினரும், தி.க-வினரும் வழக்கம்போல தங்களது ரவுடியிசத்தை கையிலெடுத்து மிரட்டியுள்ளனர். இதன் உச்ச கட்டமாக காவேரி தொலைக்காட்சிக்கும் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளனர்.


திரைப்பட இயக்குனர் மணி ரத்னம், நடிகை ரேவதி உள்பட அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் 49 பேர், உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு உள்நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். அவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி பீகார் கோர்ட்டு உத்தரவிட்டது.


இது அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், அந்த வழக்கை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


இவரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான், நேர்மையாக கேள்வி கேட்ட காவிரி தொலைக்காட்சி நெறியாளர் மதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த தொலைக்காட்சிக்கு நெருக்கடியும் கொடுத்தனர். அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்காமல் இருக்க, இடையூறு ஏற்படுத்தினர்.


மிரட்டல்களுக்கும், ரவுடி தனத்திற்கும் பெயர்போன தி.மு.க-வின் இந்த கீழ்த்தரமான செயலை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


தி.க-வினர்கூட, தி.மு.க-வின் இந்த கேடுகெட்ட செயலை ஏற்றுக்கொள்ளவில்லை.


இது தொடர்பாக தி.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், திரைப்பட இயக்குனருமான வேலு பிரபாரகரன், வெளியிட்டுள்ளா வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:- 
சமீபத்தில் காவேரி தொலைக்காட்சியின் நேர்காணல் காணும் தம்பி மதன் மற்றும் காவேரி தொலைக்காட்சிக்கு, சில சங்கடங்கள் வந்ததாகவும், அதனால் நிகழ்ச்சிகள் தடை பட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். அதற்கான மூலக்காரணம், சுப.வீரபாண்டியனிடம், “கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொல்லியிருக்கிறாரே, அப்படியிருக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் துணைவி துர்கா, அத்தி வரதரை தரிசித்து வந்துள்ளார். அப்படியானால் இதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே?" என்று கேள்வி கேட்டுள்ளார். இது மிகவும் சாதாரணமான கேள்விதான். பெரியாருடைய மனைவியே, இதுபோன்று கோவிலுக்கு சென்று வந்திருந்தால், அதுதொடர்பாக பெரியாரிடம் இந்த கேள்வியைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் "இது ஒரு காட்டுமிராண்டி செயல்" என்றுதான் சொல்லியிருப்பார்.


Video Link
https://www.facebook.com/watch/?v=382297539315698


இத்தனை ஆண்டு காலமாக மக்களை பார்த்து இப்படிதான் கேட்டு வந்துள்ளோம். பெரியாரே இதைத்தான் சொல்லி வந்தார். இப்படி இருக்கும்போது, அப்படி ஒரு குற்றத்தை நம் மீது சுமத்தும் போது, அது உண்மையாக இருக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். ஒருவேளை துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு போகாமல் இருந்து, அவர் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருந்து, அதனால் இப்படி ஒரு அநாகரிகமான ஒரு ரியாக்ஷன் நாம் ஏற்படுத்தியிருந்தால்கூட நாம் பொறுத்துக் கொள்ளலாம்.


பெரியாரின் கொள்கையால், பெரியாரின் உழைப்பால் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்து, ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்து என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?


நொடிக்கு நூறு மூடநம்பிக்கைகளை நாம் பரப்பிக்கொண்டு இருக்கிறோம்.


திராவிட இனத்துக்கு ஒரு முன்னேற்றமான வாழ்க்கையை தருகிறோம் என்ற உறுதியை கொடுத்துவிட்டு, தனது சொந்த சொத்து மாதிரி அந்த கட்சியை நடத்திக்கொண்டு, அடியாள்களை அந்த கட்சி(தி.மு.க) உருவாக்கி வருகிறது.


இந்த கட்சியில் இருப்பவனுக்கு, தன் தலைவன் என்ன செய்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்து ஒரு தலைவனை தன் குடும்பத்தில் இருந்தே உருவாக்கி கொள்கின்ற நிலைக்கு சுருக்கி விட்டோம்.


மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களுக்கு எல்லாமே தெரியும். மக்கள் எல்லாவற்றையும் சேர்ந்து வட்டியும் முதலுமாக நமக்கு திருப்பி கொடுப்பார்கள்.


இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது நாம் சுமத்திக் கொண்டு இருந்தோம். இப்போது அப்படிப்பட்ட குற்றங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் சுப.வீரபாண்டியன் இதை செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு சூழ்நிலை கைதி. வேறு யாரோ தான் இதை செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயல்களை யாராக இருந்தாலும் அவர்கள் கைவிட வேண்டும். அதுதான் இந்த காலத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமையாகும்.


இவ்வாறு திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் அந்த வீடியோ காட்சியில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story