Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி, தாஜ் மகாலுக்கும் அப்பால் இந்திய பாரம்பரியங்களை உலகப் பார்வைக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி! தமிழக நெட்டிசன்கள் புகழாரம்!!

டெல்லி, தாஜ் மகாலுக்கும் அப்பால் இந்திய பாரம்பரியங்களை உலகப் பார்வைக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி! தமிழக நெட்டிசன்கள் புகழாரம்!!

டெல்லி, தாஜ் மகாலுக்கும் அப்பால் இந்திய பாரம்பரியங்களை உலகப் பார்வைக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி! தமிழக நெட்டிசன்கள் புகழாரம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Oct 2019 6:23 AM GMT


பொதுவாக உலகத்தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது முதல் காரியமாக அவர்களை மகாத்மா காந்தி சமாதி, நேரு சமாதி , இந்திரா சமாதி, ராஜீவ் சமாதி, ஷாஜகான் மனைவி மும்தாஜின் சமாதியான தாஜ்மஹால் இவற்றுக்கு அழைத்து சென்று விட்டு எங்காவது ஓட்டலில் தங்க வைத்து அரசு அலுவலகங்களில் பேச்சு வார்த்தை நடத்துவது தான் நமது இந்திய அரசு மற்றும் தலைவர்களின் வழக்கமாக இருந்து வந்தது.


இதனால் பெரும்பாலும் அரசுப் பயணமாக இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் யாருக்கும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க பிற இடங்கள், புனிதமான இடங்கள் குறித்து தெரியாமல் போனது. உலகத்தின் பார்வைக்கும் இந்த பாரம்பரியமான, கலைநுட்பம் வாய்ந்த இடங்கள் தெரிவதில்லை.


இந்த நிலையில் பிரதமர் மோடி நம் இந்திய தலைவர்களிலேயே வேறுபட்ட சிறந்த சிந்தனை உள்ள தலைவராக உள்ளார்.


டெல்லிக்கு வெளியே, சமாதிகளைத் தாண்டி ஒரு இந்தியா இருக்கிறது என்பதை உலகுக்கு காட்ட மோடி தான் வர வேண்டியிருக்கிறது.


இதற்கு முன்பு சீன அதிபர் வந்தபோது அவரை குஜராத் அழைத்துச் சென்றார். சபர்மதி ஆசிரமம் சென்று காந்தியின் கைராட்டையை இயக்கினார்.




https://twitter.com/PIB_India/status/512252935661563904?s=20


ஜப்பான் பிரதமரோடு காசியில் கங்கா ஹாரத்தி நடத்தினார்.




https://twitter.com/NAN_DINI_/status/1119807722617229312?s=20


இந்த முறை தமிழகத்தின் கடற்கரை கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார் மோடி.. கலை நிகழ்ச்சிகளிலும் இராமாயணம்...


இந்த தேசத்தின் பண்பாடு, மரபு, கலாச்சாரம் எல்லாமே ஆன்மீகம்தான்...அதை மீண்டும் மீண்டும் உலகத்தோர் முன் எடுத்துக்காட்டுவதில் கவனமாக இருக்கிறார் மோடி..


இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம்..


இதுவரை "#தாஜ்மஹால்" என்ற #சமாதியை மட்டுமே, நம் நாட்டின் பெருமையாக காட்டி வந்த நாட்கள் போய ...


இன்று எம் #தமிழின கட்டிட பெருமையை உலகிற்க்கு எடுத்துரைக்கும் என் தலைவன்...


ஒவ்வொரு "தமிழனும்" பெருமைப்பட வேண்டிய தருணம்.. இது என முக நூல்களிலும்... டுவிட்டர்களிலும்... வாட்ஸ் அப்பிலும் தமிழர்கள் மோடியின் பெருமையை உணர்ந்து தூல் கிளப்பி வருகிறார்கள்.


இவ்வாறு சமூக ஊடக பதிவுகள் தூள் கிளப்பி வருகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News