Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தை பளிச்சென சுத்தமாக வைத்திருப்பது உடன்பிறப்புகள்! ஆக, இங்கு மோடியின் குப்பை அள்ளும் நாடகம் செல்லாது! - #Kathirநையாண்டி

தமிழகத்தை பளிச்சென சுத்தமாக வைத்திருப்பது உடன்பிறப்புகள்! ஆக, இங்கு மோடியின் குப்பை அள்ளும் நாடகம் செல்லாது! - #Kathirநையாண்டி

தமிழகத்தை பளிச்சென சுத்தமாக வைத்திருப்பது உடன்பிறப்புகள்! ஆக, இங்கு மோடியின் குப்பை அள்ளும் நாடகம் செல்லாது! - #Kathirநையாண்டி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Oct 2019 4:23 AM GMT


நையாண்டி செய்திகளுக்காக சென்னையிலிருந்து குப்பை செய்திகளை சேகரிக்கும் ஓசிபீர்.


உலகம் முழுதும் பு ரிசர்ச் நடத்திய சர்வேயில் சுத்தத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு உடனே பக்தாளும் அடிமைகளும் மார்தட்டிக்கொள்ள வேண்டாம். இதற்கு முழுமுதல் காரணம் உடன்பிறப்புகள் தான் என்று எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதற்காக ஓர் உடன்பிறப்பை சந்தித்தோம். பெயர் சொல்ல விரும்பாத அவர் எங்களுக்கு முட்டை பப்ஸ் பரிமாறிய பின் கூறியதாவது, "தினமும் காலை, எங்கள் வீடு தொடங்கி, எங்கள் தெரு முழுதும் சக உடன்பிறப்புகளுடன் நாங்கள் சுத்தம் செய்வோம். அள்ளிய குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து, அதனை உரிய தொட்டிகளில் வீசுவோம். இது எங்களுக்கு தலைவர் சொன்ன அறிவுரை. முப்பது வருடங்களாக இதனை நாங்கள் செய்து வருவதால், மாநகராட்சி குப்பை அள்ளுவதையே நிறுத்தி விட்டது."


கண்களில் பெருமை ததும்ப தொடர்ந்தார் அவர், "அதற்க்கு பின்னர் டீ கடையையும் சுத்தம் செய்வோம். அங்கே இருக்கும் பலகார ஜாடிகளையும் விடாமல் சுத்தம் செய்வோம். பின்னர், ஓட்டல்கள், பிரியாணி கடை, ஆயா இட்லி கடை என்று எல்லா இடத்திலும் நாங்கள் சுத்தம் செய்வோம். எங்களை தடுப்பவர்களிடம் நாங்கள் செய்யும் போராட்டம் தான் இந்த சங்கி - சிசிடிவி காமிரா மூலம் தவறாக சித்தரிக்கப்படுகிறது!" என்று கண்களில் கண்ணீருடன் விடைபெற்றார்.


அடுத்து நாங்கள் சென்றது அழகான கூவம் நதிக்கரை. அங்கே படகு சவாரியில் ஏறி, சக பயணியிடம் உரையாடினோம். "கடந்த நாற்பது வருடங்களாக இந்த எழில்மிகு கூவம் ஆற்றில் தான் நாங்கள் படகு சவாரி செய்து வருகிறோம். இந்த கூவம் ஆற்று தண்ணீரை அப்படியே குடிக்கலாம். எல்லா புகழும் உடன்பிறப்புகளுக்கே" என்று மெரினா பக்கம் திரும்பி கைகூப்பி வணங்கினார்.


"கடந்த ஐம்பது வருடங்களாக உடன்பிறப்புகள் எல்லா இடத்தையும் சுத்தம் செய்து வைத்துள்ளனர். வார்டு, மாவட்டம், நகரங்கள், அரசு கஜானாக்கள் என்று அவர்கள் துடைத்து வைக்காத இடங்களே தமிழகத்தில் இல்லை. புறம்போக்கு நிலங்களில் இருந்த குப்பைகள் மட்டும் இன்றி, அதன் உரிமையாளர்களையும் அகற்றிய பெருமை உடன்பிறப்புகளுக்கே சாரும்!" என்று அரசியல் விமர்சகர் சூயாம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இவ்வாறு சுத்தமாக இருக்கும் தமிழகத்தில் வந்து, வட இந்திய ஆரிய குப்பைகளை மோடியே வீசிவிட்டு, அவரே அள்ளினால், அவரை பானி பூரிகாரர்கள் வேண்டுமானால் நம்பலாம், நாங்கள் நம்ப மாட்டோம். எங்களுக்கு தெரியும் தமிழகத்தை தூய்மையாக வைத்திருப்பது உடன்பிறப்புகள்!"


குறிப்பு: இது முழுக்க கற்பனை செய்தியாகும். வாசகர்கள் இதனை நிஜ செய்தி என்று நினைத்து குழம்பக்கூடாது. எனினும் தமிழ் செய்தி ஊடங்கங்கள் போல் அல்லாமல், நாங்கள் இதனை குறிப்பில் சொல்கிறோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News