Kathir News
Begin typing your search above and press return to search.

கட்சியின் தேசிய நிர்வாகியை முகத்தில் கரி,பூசி செருப்பு மாலை போட்டு, கழுதை மீது ஊர்வலம் வைத்த மாயாவதி கட்சினர்! அரசியல் அரங்கில் அதிர்ச்சி

கட்சியின் தேசிய நிர்வாகியை முகத்தில் கரி,பூசி செருப்பு மாலை போட்டு, கழுதை மீது ஊர்வலம் வைத்த மாயாவதி கட்சினர்! அரசியல் அரங்கில் அதிர்ச்சி

கட்சியின் தேசிய நிர்வாகியை முகத்தில் கரி,பூசி செருப்பு மாலை போட்டு, கழுதை மீது ஊர்வலம் வைத்த மாயாவதி கட்சினர்! அரசியல் அரங்கில் அதிர்ச்சி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2019 3:53 AM GMT


ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அங்கு வந்திருந்த கட்சியின் மூத்த தலைவரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான ராம்ஜி கவுதமின் முகத்தில் கரி பூசினர். பிறகு அவருக்கு கழுத்தில் செருப்பு மாலை அணிவித்ததுடன் கழுதை ஒன்றின் மீது அமர வைத்து கட்சியின் அலுவலகம் முன்பாக வீதியில் நிறுத்தினர். மேலும் இந்த அவமானகரமான, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வீடியோ படமாக எடுத்து இணையதளத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக பரவச்செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் கூறியதாவது:


கட்சி மேலிடத்தின் போக்கு சரியில்லை. அவர்கள் காசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தொண்டர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பணம் கொடுத்து காங்கிரசிலிருந்து, பாஜகவில் இருந்தும் கட்சி தாவி வருபவர்கள் பதவிகளை அடைகிறார்கள். சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கட்சி மேலிடம் பணம் வாங்கிக் கொண்டு வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குத்தான் டிக்கெட் வழங்கியது.


இது குறித்து பல முறை தலைவர் மாயாவதியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம், இரண்டு முறை போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்தவித பயனும் இல்லை. இந்த நிலையில் கட்சி தலைமையகம் வந்த தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு எங்கள் கோபத்தை வெளிக் காட்டும் விதத்தில் இவ்வாறு செய்தோம் என்றனர்.


இந்த சம்பவம் உண்மையில் நேற்று இந்தியா முழுவதும் அரசியல் அரங்கை அதிர செய்தது. சொந்த கட்சின் மேலிட பிரதிநிதியை இந்த அளவுக்கு அவமானப்படுத்திய சம்பவம் எப்போதும் நடைபெற்றதில்லை என கூறினர்.


இந்த சம்பவம் குறித்து கட்சின் தேசிய தலைவர் மாயாவதி கூறுகையில் “ இந்த வெட்கக் கேடான சம்பவத்துக்கு பின்னால் காங்கிரசின் சதி உள்ளது. அவர்கள் வேண்டுமென்றே சாதி அடிப்படையில் எங்களை அவமானப் படுத்துகின்றனர். காங்கிரசுக்கு பாடம் கற்பிப்போம் என்றார்.


ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து டிக்கெட் பெறுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறியதாகவும், இவர்களில் சிலர் எம்எல்ஏ ஆன பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை என்றும் காங்கிரசார் கூறுகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News