Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே ஆண்டில் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்வு!! காரணங்கள் குறித்து வியக்க வைக்கும் ஆய்வுத்தகவல்கள்!!

ஒரே ஆண்டில் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்வு!! காரணங்கள் குறித்து வியக்க வைக்கும் ஆய்வுத்தகவல்கள்!!

ஒரே ஆண்டில் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு  இரண்டு மடங்கு உயர்வு!! காரணங்கள் குறித்து வியக்க வைக்கும் ஆய்வுத்தகவல்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2019 8:46 AM GMT


நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு சுணக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்கட்சிகளால் மிகைப்படுத்தி கூறப்பட்டாலும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும், இது உலகளாவிய தற்காலிக சுணக்கம் என்றும், இந்தியாவில் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பதால் மீண்டும் இந்தியப் பொருளாதாரம் பலமாக எழுச்சியுறும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம், பேரின பொருளாதாரவாத அடிப்படையில் வளர்ச்சி குறைந்திருப்பினும் இந்திய குடும்பங்களின் தனிநபர் பொருளாதார நிலை முன்பைக் காட்டிலும் வலுவாக உள்ளதாகவும், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, கிரெடிட் சுயிஸ் வங்கியின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


நடப்பு ஆண்டில், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 12.6 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 894 லட்சம் கோடி ரூபாய்.இதுவே, கடந்த ஆண்டில், இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, 5.97 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 424 லட்சம் கோடி ரூபாய்.இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 2000 - -2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும், 43 சதவீதம் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம். அதாவது, 312 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு அதிகரிக்கும்.நடப்பு ஆண்டில், சராசரியாக, தனிநபர் ஒருவரின் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் ரூபாய். இது, 3.3 சதவீதம் அதிகரிப்பு. அதே சமயம், கடன், 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது.நிதி சொத்துக்கள், 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி அல்லாத சொத்துக்கள், 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சந்தை நிலையற்று இருப்பதை உணர்த்துவதாக கூறப்பட்டுள்ளது.



மேலும், கிட்டத்தட்ட, 4,500 பேர், 355 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 1,790 பேர், 710 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத்துள்ளனர்.உலகளவில், மிக அதிக சொத்து வைத்திருக்கும் தனிநபர் கொண்ட நாடுகள் வரிசையில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து என்பது நிதிச் சந்தைகளில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளையும் உள்ளடக்கியே வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கறுப்புப் பணம் முதலீடு இல்லாமல் போனதால் ரியல் எஸ்டேட் மந்த நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், இந்தியக் குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வறிக்கை வெளியிட்டிருப்பினும், சொத்து மதிப்பு இரட்டிப்பானதற்கான காரணம் எதையும் வங்கி குறிப்பிடவில்லைவில்லை.


என்றால் கூட தற்போது இந்தியாவை 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான ஆட்சியில் அத்தியாவசிய பண்டங்கள் விலை எதுவும் அதிகரிக்கவில்லை. குறிப்பாக உணவுப் பண்டங்கள், எரிபொருள்கள் விலை, கட்டுமானப் பொருள்களான இரும்பு, சிமென்ட் போன்ற பொருள்களின் விலை அனைத்தும் கட்டுக்குள் உள்ளது.


அதே சமயம் ரியல் எஸ்டேட் துறையில் சுணக்கம் இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுப்படி வீடு கட்டுமானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் சீரான வகையில் முன்னேற்றம் உள்ளது. இதனால் சொத்துக்கள் எளிதில் விற்பனை ஆக வில்லை என்றாலும், அதன் மதிப்பு அதிகரித்தே வந்துள்ளது. விற்பனை குறைந்தாலும் விலை குறையவில்லை. இலாபமும் குறையவில்லை. அனைத்து பண்டங்கள் விஷயத்திலும் இதே நிலைதான்.மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் சொத்துக்களை பணமாக வைத்துக் கொள்ளாமல் அசையா சொத்துக்களாக மக்கள் மாற்ற முனைந்துள்ளனர்.


அதேபோல ஊதிய உயர்வு அரசு ஊழியர்களை குழிபடுத்தும் அளவுக்கு நல்ல முன்னேற்றம், தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் ஆள் குறைப்பு என்று கூறப்பட்டாலும் ஊதிய வளர்ச்சி கணிசமான அளவில் உள்ளது. விவசாய உற்பத்தியும் நன்றாக இருந்தது. விவசாயிகளின் வருமானமும் தானியங்களின் விலை கொள்கையால் உயர்ந்தே உள்ளது. இத்தகைய காரணங்கள் சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணமாக உள்ளன எனவும் கூறப்படுகிறது.


கிராமங்களிலும் விவசாயிகளுக்குள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் மதிப்பும் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பும் சீரான அளவில் உயர்ந்து வந்து தற்போது நல்ல மதிப்பை எட்டியுள்ளதால் வாங்குபவர்களுக்கு கஷ்டம் இருந்தாலும், அதை சேமித்து வைத்துள்ளவர்களுக்கு மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இத்தகைய காரணங்களும் சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணமாக உள்ளன எனவும் கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News