Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜ்ய சபையின் 250 ஆவது கூட்டம் ஓர் பார்வை!

ராஜ்ய சபையின் 250 ஆவது கூட்டம் ஓர் பார்வை!

ராஜ்ய சபையின் 250 ஆவது கூட்டம் ஓர் பார்வை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 12:32 PM GMT


இந்த மாதம் நவம்பர் 18-ம் தேதி ராஜ்ய சபையின் 250 ஆவது அமர்வு நடந்தது. இந்த
உணர்வுபூர்வமான தருணத்தை போற்றும் விதமாக அவையின் தலைவர் வெங்கையா நாயுடு
1952 தொடங்கி அவை நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அடங்கிய ஒரு இதழை
வெளியிட்டார். 118 பக்கங்களையும் 29 தலைப்புகளையும் கொண்ட அப்புத்தகம் ராஜ்ய சபை
நடவடிக்கைகளை தெரிந்துகொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.



இந்த புத்தகம் ராஜ்யசபை கடந்து வந்த பாதையை விவரிக்கிறது. 1952ல் இருந்த சமூக
பொருளாதார கல்வி விவசாயம் தொழில் மருத்துவம் சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு
ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அது தொடர்பான விவாதங்கள், கருத்துக்கள்
போன்றவைகள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. இந்த 250 வது அமர்வை பெருமைப்படுத்தும்
விதமாக ரூ 150 மதிப்புள்ள வெள்ளி நாணயம் ரூபாய் மதிப்புள்ள தபால் தலை
வெளியிடப்பட்டது. ராஜ்யசபை இதுவரையில் 247 ஆவது அமர்வு வரை 3,817
மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது 60 மசோதாக்கள் ஆட்சி கலைந்ததால் நடைமுறைக்கு
வராமல் போனது


1952 இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து இன்றுவரை மொத்தமாக 3818 சட்டங்கள்
இயற்றப்படுகின்றன. தற்போதைய ராஜ்ய சபையின் தலைவர் திரு எம் வெங்கைய நாயுடு
துணைத்தலைவர் ஹரீஷ் நாராயண் எதிர்க்கட்சித் தலைவர் ராஜசபை என்றும் லோக்சபை
என்றும் கூறப்படுகிறது தற்போது ராஜ்யசபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 245 அதில் 12 பேர்
ஜனாதிபதியால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். (தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின்
அறிவுரையின் பேரில்).



இந்த 12 பேரும் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை கல்வி கலை சமூக
சேவையில் சிறந்து விளங்குபவர்கள் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த
சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்தந்த மாநிலத்தின் பிரதிநிதியாக
தேர்ந்தெடுக்கப்படுவர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு
ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை இருக்கும் ராஜ சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5
ஆண்டுகள் ஆகும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News