Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க பொதுக்குழுவில் நடந்தது என்ன? நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் எவை?

அ.தி.மு.க பொதுக்குழுவில் நடந்தது என்ன? நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் எவை?

அ.தி.மு.க பொதுக்குழுவில் நடந்தது என்ன? நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் எவை?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 1:54 PM GMT


சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். இதில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதில் கட்சியில் அரும்பணி ஆற்றி வரும் கழகத் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வரும் கோடி கணக்காண கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சி முறையில் பயணிக்க உறுதி, விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றி, தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்ற உலக முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மனாம் நிறைவேற்றப்பட்டது.


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க அரசின் சாதனைகளை மறைக்க முயலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க அரசு என்பது உறுதியாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும், கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ள சங்கக்கால தமிழர்களின் வாழ்க்கை சிறப்பினை உலகறிந்த செய்திருக்கும் அ.தி.மு.க அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News