Kathir News
Begin typing your search above and press return to search.

மான் கி பாத்' நிகழ்ச்சியில் ‘முப்பது கோடி முகமுடையாள்’ தமிழன் பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: அயோத்தி தீர்ப்பு குறித்தும் சூப்பர் பேச்சு!

மான் கி பாத்' நிகழ்ச்சியில் ‘முப்பது கோடி முகமுடையாள்’ தமிழன் பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: அயோத்தி தீர்ப்பு குறித்தும் சூப்பர் பேச்சு!

மான் கி பாத் நிகழ்ச்சியில் ‘முப்பது கோடி முகமுடையாள்’ தமிழன் பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: அயோத்தி தீர்ப்பு குறித்தும் சூப்பர் பேச்சு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 10:32 AM GMT


'மான் கி பாத்' (மனதின் குரல்) 59-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது,


'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, நமது நாட்டுக்கு 30 கோடி முகங்கள் இருந்தாலும், தேசம் என்ற ஒரே உடலை தான் கொண்டுள்ளோம் என்ற அர்த்தத்தை வலியுறுத்தி, 18 வகை மொழிகள் இங்கு பேசப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒவ்வொன்றும் நமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றன என்றார்.


அயோத்தி தீர்ப்பு குறித்து கூறிய அவர் “சட்டப் போர் இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. மறுபுறம், நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் வளர்ந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.


வரலாற்று அயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணிய குடிமக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், “அயோத்தி வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபின், 130 கோடி இந்தியர்களுக்கும் தேசிய நலன் தான் எப்போதும் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் எப்போதும் போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்..


டிசம்பர் 7-ஆம் தேதி முப்படைகளின் கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் இந்த தினத்தைக் கொண்டாட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வீரர்களின் தியாகத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆயுதப்படைக் கொடியை அந்நாளில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


சிபிஎஸ்இ பள்ளிகள் 'ஃபிட் இந்தியா வாரம்' என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் இதை கொண்டாடலாம். இதன்மூலம் பல்வேறு வகை விளையாட்டு, யோகா மற்றும் நடனம் உள்ளிட்ட பல உடற்பயிற்சி செயல்பாடுகள் மூலம் உடல்திறன் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும். இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News