Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ்தவான் அதிரடி நீக்கம்! சன்னி வக்ப் வாரியம் முடிவு!

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ்தவான் அதிரடி நீக்கம்! சன்னி வக்ப் வாரியம் முடிவு!

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ்தவான் அதிரடி நீக்கம்! சன்னி வக்ப் வாரியம் முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 9:10 AM GMT



அயோத்தியில் இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்ம பூமியாக ஏற்றுக் கொண்டு ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் சென்ற நவம்பர் மாதம் 9- ந்தேதி வெளியிட்டது. மேலும் அந்த இடத்துக்கு உரிமை கொண்டாடிய சன்னி வக்ப் வாரியத்தின் கோரிக்கை மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்குமாறும் அன்றைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.


இந்த உத்தரவை ஏற்றுக் கொள்வதாக ஆரம்பத்தில் கூறிய சன்னி வக்ப் வாரியம் கடந்த 2 வாரங்களாக முரண்டு பிடித்து வருகிறது. தீர்ப்பின் சில பகுதிகளை மட்டுமே நாங்கள் ஏற்கிறோம். தீர்ப்பு எங்களுக்கு முழு திருப்தியை தரவில்லை. இதனால் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாகக் கூறி நேற்று திங்கள் கிழமை சுப்ரீம் கோர்டில் மனுவையும் தாக்கல் செய்தனர்.


மேல் முறையீட்டு மனுவில் “1934, 1949, 1992 ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் தரப்பில் நடத்தப்பட்ட குற்றங்களைத் தீர்மானிக்கும் போது உயர் நீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் தவறு செய்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் "142 வது பிரிவை தவறாகப் பயன்படுத்தியுள்ளது" என்றும், பாப்ரி மசூதியை வக்ஃப் சொத்து என்று பாராட்டாத உயர் நீதிமன்றத்தின் முடிவு தவறானது. என்றும் மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அயோத்தி தொடர்பான நிலம் பிரச்சினையில் முஸ்லிம் தரப்பினருக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் ஆஜராகி வந்த ராஜிவ் தவானை தங்கள் குழுவில் இருந்து வக்ப் வாரியம் நீக்கிவிட்டது. காரணங்கள் சொல்லப்படவில்லை.


ஆனால் இது குறித்து ராஜிவ்தவான் தனது முக நூல் பதிவில் கூறுகையில் “நேற்றைய மறு ஆய்வு மனுவை ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்துள்ளதாகவும், தன்னை அவர்கள் குழுவில் இருந்து நீக்கியுள்ளதாக மற்றொரு முஸ்லிம் தரப்பு வழக்கறிஞரான எஜாஸ் மக்பூல் கூறியதாக அவர் கூறினார். இனி அவர்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறிய அவர் தான் நீக்கப்பட்டது தொடர்பாக ஜாமியத்தின் செயலாளர் மஹ்மூத் மதானி எனக்கு உடல்நிலை சரியில்லை என மேற்கோள் காட்டிய காரணம் 'முட்டாள்தனமானது மற்றும் பொய்யானது' என்றும் தவான் கூறியுள்ளார்.


Translated Article From REPUBLIC WORLD


Next Story
கதிர் தொகுப்பு
Trending News