Kathir News
Begin typing your search above and press return to search.

‘பதானி உடை’ அணிந்து வந்த தலித் இளைஞர் மீது 2 முஸ்லிம் வாலிபர்கள் சரமாரி தாக்குதல்!

‘பதானி உடை’ அணிந்து வந்த தலித் இளைஞர் மீது 2 முஸ்லிம் வாலிபர்கள் சரமாரி தாக்குதல்!

‘பதானி உடை’  அணிந்து வந்த தலித் இளைஞர் மீது 2 முஸ்லிம் வாலிபர்கள் சரமாரி தாக்குதல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 9:04 AM GMT


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் வசித்து வருபவர் ஜெயந்தி பாட்டி ( வயது 27 ). தலித் வாலிபரான இவர் லாரி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று செவ்வாய்க்கிழமை இவர் நகரில் உள்ள டீ கடைக்கு டீ அருந்த சென்றார். அப்போது அவர் வசதியான முஸ்லிம்கள் அணியும் பதானி உடையை விரும்பி அணிந்தவாறு சென்றார். இது காலருடன் கூடிய நீளமான பைஜாமா ஆகும். பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளில் செல்வந்தர் வீட்டு மணமகன்கள் இந்த ஆடையை அணிவதுண்டு.


இதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அம்ஜத் பதான் மற்றும் அஸ்கர் பதான் ஆகிய இஸ்லாமிய இளைஞர்கள் பார்த்துவிட்டனர். அவர்கள் உடனே அந்த தலித் டிரைவரை மடக்கிப் பிடித்து நீ ஒரு தலித்.. நீ எப்படி இந்த உயர்ந்த ரக பதானி ஆடையை அணியலாம் எனக் கேட்டு அந்த ஆடையை கழற்றி அவரது முகத்தை மூடி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இன்னொருமுறை இதுபோல பார்த்தால் கொலை செய்துவிடுவோம் எனக் கூறி எச்சரித்துவிட்டு அந்த உடையையும் கிழித்து எறிந்து விட்டுச் சென்றனர்.


அந்த பகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையினராக வசிக்கும் பகுதி என்பதால் அந்த முஸ்லிம் வாலிபர்களின் வெறிச் செயலை யாரும் கண்டிக்கவில்லை. இந்த நிலையில் தாக்கப்பட்ட அந்த தலித் வாலிபர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில செய்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Translated Article From OPINDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News