Kathir News
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு குறைந்த விலை உணவு இல்லை! சபாநாயகர் கருத்தை ஏற்று ஒருமனதாக முடிவு!

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு குறைந்த விலை உணவு இல்லை! சபாநாயகர் கருத்தை ஏற்று ஒருமனதாக முடிவு!

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு குறைந்த விலை உணவு இல்லை! சபாநாயகர் கருத்தை ஏற்று ஒருமனதாக முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 6:31 AM GMT


நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுக்கு அங்குள்ள மிகப்பெரிய கேண்டீனில் அரசு மானியத்தில் மிகக் குறைந்த விலையில் ஹைதராபாத் பிரியாணி முதல் காபி வரை மிகக் குறைந்த விலையில் சப்ளை செய்யப்பட்டது.


முழு சைவ சாப்பாடு 30 ரூபாய்க்கும், ஹைதராபாத் பிரியாணி 60 ரூபாய்க்கும், காபி, டீ ஆகியவை வெறும் ஐந்து ரூபாய்க்கும், சப்பாத்தி வெறும் 2 ரூபாய்க்கும் தரமான வகையில் தயாரித்து இன்னும் பல உணவு வகைகளும் சுவையாக தரப்பட்டன.


இந்த நிலையில், வெளியில் சாதாரண குடிமக்கள் விலைவாசியால் கடுமையாக அவதிப்படும் போது ஏற்கனவே இலட்சக்கணக்கில் அதிக சம்பளம், படிகள், இலவச பங்களா வசதிகளை அனுபவிக்கும் எம்பிக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருளா ? என விமர்சனங்கள் பல ஆண்டுகளாக எழுந்தன. சமீபத்தில் ஜே.என்.யு. பல்கலை கழக மாணவர்கள் மெஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.


அப்போது அவர்கள் டெல்லி நகர வீதிகளில் வசதியான எம்பிக்களுக்கு 30 ரூபாயில் சாப்பாடு, 2 ரூபாய்க்கு சப்பாத்தி ஆனால் மாணவர்களுக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் மெஸ் கட்டணம் உயர்வா எனக் கேட்டு ஆர்பாட்டம் செய்தனர்.


இந்த நிலையில் பல காலமாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அனைத்து கட்சி எம்பிக்களிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இனி கேண்டீனில் உணவுக்கு மானியத்தை நீக்க ஒப்புக் கொண்டனர். நேற்று மாலை இந்த தகவல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Translated Article From INDIA TODAY


Next Story
கதிர் தொகுப்பு
Trending News