Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்மிருதி இரானியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 2 கேரள எம்பிக்கள் சஸ்பென்ட்! சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை!

ஸ்மிருதி இரானியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 2 கேரள எம்பிக்கள் சஸ்பென்ட்! சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை!

ஸ்மிருதி இரானியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 2 கேரள எம்பிக்கள் சஸ்பென்ட்!  சபாநாயகர் ஓம் பிர்லா  நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 5:59 AM GMT


மக்களவையில் நேற்றைய விவாதத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மிக அருகாமையில் சென்று அநாகரீகமான முறையில் மிரட்டும் தோரணையில் சப்தமிட்டு பேசிய 2 கேரள எம்பிக்கள் இன்று சபையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படவுள்ளதாக உள்ளனர் என செய்திகள் வந்துள்ளன.


நேற்று மக்களவையில் உன்னாவோ பலாத்கார சம்பவம் குறித்த விவாதம் சூடான முறையில் விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "உ.பி.யில் ஒரு ராமர் கோயில் பாஜகவால் கட்டப்படும்போது அதே பாஜகவால் ஒரு சீதை பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்படுகிறார்" என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் முக்கியமான இந்த விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா சபையில் இருக்க வேண்டும் எனவும் கோரி காங்கிரசார் ஆர்பாட்டம் செய்தனர்.


அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி குறுக்கிட்டு உன்னாவோ சம்பவத்தில் குற்றவாளிக்கு தரப்பட்ட ஆயுள் தண்டனை குறித்தும், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது கேரளாவை சேர்ந்த டி.என். பிரதாபன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய 2 எம்பிக்கள் ஸ்மிருதி இரானியின் மிக அருகே நின்று கொண்டு அவரைத் தாக்க முற்படுவது போலவும், மிரட்டும் தோரணையிலும் கோஷமிட்டு அநாகரீகமான முறையில் பேசினர்.


இவ்வாறு அவர்கள் அவை விதிகளை மீறி கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதால் அவர்களை தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்குமாறு சபாநாயகர் பிர்லா வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை.


இந்த நிலையில் பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மன்ற நடவடிக்கைகளின் விதி 374 ன் கீழ் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தார், இந்த பிரிவு ஒழுங்கற்ற எம்.பி.க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


டிசம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடையும் மீதமுள்ள அமர்வுக்கு இந்த எம்பிக்களை சஸ்பென்ட் செய்யுமாறு அவர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டி.என். பிரதாபன் மற்றும் காங்கிரஸின் டீன் குரியகோஸ் ஆகியோர் சபாநாயகரால் இன்று இடைநீக்கம் செய்யப்பட உள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.


Translated Article From TRIBUNEINDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News