Kathir News
Begin typing your search above and press return to search.

வன்முறையை கட்டவிழ்த்து விடும் போராட்ட கும்பல் - ஆதாரத்தை அழிக்க சி.சி.டி.வி கேமராக்களை அடித்து நொறுக்கியது அம்பலம் : மங்களூரு துப்பாக்கிச் சூட்டின் பகீர் பின்னணி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2019 10:42 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

பெரும் சர்ச்சைக்குள்ளாகிய இந்த விவகாரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான விளக்கத்தை மங்களூரு போலீசார் அளித்துள்ளனர். வன்முறையில் ஈடுபடுவது தெரியக்கூடாது என்பதற்காக, போராட்டக்காரர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பிறகுதான் போலீசார் மீது கல்வீச்சு மற்றும் போலீஸ் வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதற்கான சிசிடிவி ஆதாரத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.

https://www.facebook.com/MangaluruCityPolice/videos/2928567767161974/?v=2928567767161974

Next Story
கதிர் தொகுப்பு
Trending News