Kathir News
Begin typing your search above and press return to search.

நாங்கள் பரம்பரை ஸ்ரீராம பக்தர்கள், ஒரு போதும் இஸ்லாமுக்கு மாற மாட்டோம்! போலி தமிழ் புலிகளுக்கு நடூர் தலித் காலனி மக்கள் பதிலடி!

நாங்கள் பரம்பரை ஸ்ரீராம பக்தர்கள், ஒரு போதும் இஸ்லாமுக்கு மாற மாட்டோம்! போலி தமிழ் புலிகளுக்கு நடூர் தலித் காலனி மக்கள் பதிலடி!

நாங்கள் பரம்பரை ஸ்ரீராம பக்தர்கள், ஒரு போதும் இஸ்லாமுக்கு மாற மாட்டோம்! போலி தமிழ் புலிகளுக்கு நடூர் தலித் காலனி மக்கள் பதிலடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 11:33 AM GMT



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் ஆதிதிராவிடர் காலனியில் சென்ற 2-ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுவர் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது விழுந்தது.


இந்த கோர சம்பவத்தில் வீடுகளுக்குள் உறங்கி கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். நாடு முழுவதும் சோகத்தை ஏற்டுத்திய இந்நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தப்பட்டது.


உயிரிழப்பிற்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரும் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், போராட்டம் நடத்திய நாகை திருவள்ளுவன் தலைமையிலான தமிழ் புலிகள் அமைப்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதற்கு நாதியற்ற நிலையில் உள்ளதாலும், கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாலும் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது குடும்பத்துடன் 3000 பேர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுவதென முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர்.


வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி மதம் மாறவுள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இதை சில தமிழக ஊடகங்களும் பெரிது படுத்தி பரப்பின. இதனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பானது. இதை அடுத்து ஆங்கில பத்திரிக்கையாளர்கள் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள மக்களிடம் இது குறித்து கேட்டனர்.


அப்போது பேசிய அப்பகுதி மக்கள் “நாங்கள் இயல்பாகவே ராம பக்தர்கள், வழி வழியாக ராமரை வழிபடுபவர்கள், எங்களுக்கு இஸ்லாம் மதம் செல்வதில் எந்த வித இஷ்டமும் கிடையாது, எங்களை மதம் மாற்ற எந்த இஸ்லாமிய அமைப்பும் இங்குவரவில்லை. இதில் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் அரசியல் செய்வதாக”க் கூறினார்.


இது குறித்து பேசிய போலீசாரும் “இங்குள்ள மக்களுக்கு இஸ்லாம் மதம் மாறும் எந்த விருப்பமும் இல்லை என்றும், சுவர் இடிந்து விழுந்த சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் தங்கள் இந்துசமய பூசைகள் எதையும் விட்டுவிடவில்லை என்றும், சிலர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக சொன்ன கருத்துக்கள் இவை” என்றும் கூறினார்.


SOURCE:- OPINDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News