Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக களம் இறங்கிய 23 முஸ்லிம் அமைப்புகள், எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சி பின்னணி!

அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக களம் இறங்கிய 23 முஸ்லிம் அமைப்புகள், எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சி பின்னணி!

அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக களம் இறங்கிய 23 முஸ்லிம் அமைப்புகள், எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சி பின்னணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 6:48 AM GMT



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் வரிந்துகட்டிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு எதிராக களம் இறங்கின. அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முஸ்லிம் ஓட்டுகள் ஒரு ஓட்டு கூட அதிமுக கூட்டணிக்கு கிடைக்காத வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஜமாத்தில் மூலம் பிரச்சாரம் செய்தனர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், பல ஊர்களில் ஜமாத்தார்கள் தெருவில் இறங்கி மைக் வைத்து பேசினார்கள். அப்போது அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மதவெறி கட்சிகளின் தலைவர்களுக்கு பேரிடியாக அமைந்தன. அவர்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றும், அதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கணித்திருந்தனர்.


அந்த கணிப்பு முழுவதுமாக தகர்த்து எறியப்பட்டது. பாராளுமன்ற தேர்தலின்போது 39 எம்பிக்களுக்கு ஒரே ஒரு எம்பியை மட்டுமே பெற்ற அதிமுக கூட்டணி, சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சரிசமமாக இடங்களை கைப்பற்றியது. அதோடு அதிமுகவின் ஓட்டு சதவீதமும் கணிசமாக உயர்ந்தது. அதோடு ஊராட்சி ஒன்றி தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.


முஸ்லிம்களின் ஓட்டுகள் இல்லாமலேயே அதிமுக அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது அப்பாவி முஸ்லிம்களை வைத்து பிழைப்பு நடத்தி வரும் முஸ்லிம் மதவெறி கும்பல்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் 23 முஸ்லிம் மதவெறி அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சரணாகதி அடைந்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் இருவரையும் அவசர அவசரமாக சந்தித்து முறையிட்டு மன்றாடி உள்ளனர்.


எல்லாவற்றிற்கும் மேலாக “பாஜகவின் அடிமை அதிமுக” என்று மேடைக்கு மேடை முழங்கி வந்த முஸ்லிம் மதவெறி தலைவர்கள், இப்போது திடீரென முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்ததில் பின்னணியில் மற்றுமொரு முக்கிய காரணமும் பொதிந்து உள்ளது.


களியக்காவிளையில் காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன், முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் அலி என்பவன், குஜராத்தில் சிக்கியுள்ளான். ஐ.எஸ் பயங்கரவாதியான இவன், குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது தெரியவந்துள்ளது.


சென்னை அம்பத்தூரில் 2014-ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பாடி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செய்யது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரை சேர்ந்த ராஜா முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், உடனே தலைமறைவாகிவிட்டனர். இப்போது மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாகி வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களின் பயங்கர சதி திட்டத்திற்கு துணை புரிந்த பெங்களூருவைச் சேர்ந்த முகமது கனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 பேர், சில தினங்களுக்கு முன்பு தமிழக கியூ பிராஞ்ச் போலீசிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகளும், குண்டுகளும் கைப்பற்றபட்டுள்ளன. அவர்களை சென்னை அழைத்து வந்து புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


இவர்களிடம் கைப்பற்றபட்ட துப்பாக்கி குண்டுகளும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை உதவியாளர் வில்சன் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டும் ஒரே மாதிரியாக உள்ளது தெரியவந்துள்ளது.


கன்னியாகுமரியில் போலீஸ் சப்-இன்பெக்டரை கொலை செய்த பயங்கரவாதிகள், பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள், டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள், குஜராத்தில் கைது செய்யப்பட்டவன் அனைருமே ஐ.எஸ் பயங்கரவாதிகளாக மாறி, பயங்கர நாச வேலையில் ஈடுபட இருந்தது வெளியாகி உள்ளது.


இதேபோல பல முஸ்லிம் இளைஞர்கள், பயங்கரவாதியாக மாறி சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்து வருவது தெரிந்த விஷயம். அது தொடர்பாக ஏற்கனவே தமிழகத்தில் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


களியக்காவிலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள், அங்குள்ள மசூதியினுள் நுழைந்துள்ளனர். இது போல ஒவ்வொரு பயங்கரவாதியும் முஸ்லிம்கள் பகுதிகள் மற்றும் மசூதிகளில் அடைகலம் புகுந்துகொள்வது வாடிக்கையாக உள்ளது. மதத்தின் பெயரால் பயங்கரவாதிகளை முஸ்லிம்கள் அரவணைப்பது வேதனையான உண்மை.


அதேபோல குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை முஸ்லிம் மத பெரியவர்கள் தனிமைப்படுத்தி காவல்துறையிடம் பிடித்துகொடுப்பதில்லை. இது அந்த சமுதாய மக்கள் அனைவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது என்பதை அவர்கள் ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் முஸ்லிம் மதவெறி அமைப்புகளின் தலைவர்கள் முதல்வர், துணை முதல்வரை திடீரென சந்தித்து உள்ளனர்.


பாராளுமன்ற தேர்தலின்போது முதல்வரை சந்திக்காதவர்கள், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளால்தான் திமுக வெற்றி பெற்றது என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியை வெளிப்படையாக ஆதரிததவர்கள், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கக்கூடாது என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள், இப்போது திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்துள்ளது அவர்களின் உள்நோக்கத்தை பறைசாற்றுகிறது.


இவ்வளவு நாளும் மதத்தின் பெயரால் வங்கதேச முஸ்லிம்களுக்கும், மியான்மர் நாட்டு முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போது, அதே மதத்தின் பெயரால் பயங்கரவாதிகளுக்கு பரிந்துபேச வந்துள்ளனர்.


கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளையே, அப்பாவிகள் என்றும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக வெட்கமே இல்லாமல் போராடி வருவதும் இதே கும்பல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News