Kathir News
Begin typing your search above and press return to search.

CAA-வுக்கு எதிராக நாடகம் நடத்திய பள்ளி மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது! தலைமை ஆசிரியை கைது!

CAA-வுக்கு எதிராக நாடகம் நடத்திய பள்ளி மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது! தலைமை ஆசிரியை கைது!

CAA-வுக்கு எதிராக நாடகம் நடத்திய பள்ளி மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது! தலைமை ஆசிரியை கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Feb 2020 10:51 AM GMT



தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்தினால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது தெரிந்திருந்தும், வேண்டுமென்றே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், முஸ்லிம் மதவெறி அமைப்புகளும் போராட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் வன்முறையை தூண்டி வருகின்றன. தேசத் துரோக செயல்களையும் அரங்கேற்றி வருகின்றன.


முஸ்லிம் மத குருமார்கள் அப்பாவி முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தேசத்திற்கு எதிராக திருப்பி வருகின்றனர். அவர்களை நடிகர் ரஜினிகாந்த் கண்டித்து இருந்தார்.


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் வழிபாட்டு தலங்களில் விஷத்தை கக்கி வந்த நிலையில், முஸ்லிம் பள்ளிகளிலும் முஸ்லிம் ஆரிரியர்கள் தேசத்துக்கு எதிரான விஷத்தை கக்கி வருகின்றனர்.


கர்நாடகா மாநிலம் பீதரில் உள்ள சாஹீன் முஸ்லிம் பள்ளியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நாடகம் என்ற போர்வையில், அந்தப் பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராகவும் தேச விரோத கருத்துக்களை பரப்பி உள்ளனர்.


இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் நீலேஷ் ரக்சாலா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த முஸ்லிம் பள்ளியின் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தேசவிரோதமாக விஷத்தை கக்கி நாடகம் போட்ட பள்ளி தலைமை ஆசிரியையும், உருது ஆசிரியையுமான பரிதா பேகம் மற்றும் நபுன்னிகா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியில் உள்ள மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்பது தவறான முன் உதாரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News