யோகி பாபுவின் 'குய்கோ' திரைப்படம் - தலைப்புக்குள் இப்படி ஒரு கதையா?
யோகி பாபு விதார்த் இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் குய்கோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அருள் செழியன் இயக்கத்தில் யோகி பாபு 'குய்கோ' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இவருடன் விதார்த்தும் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் தலைப்புக்குள் மிகப்பெரிய தாய் பாசத்தின் தத்துவமே அடங்கியுள்ளது. யோகி பாபு வாழ்வது ஒரு மலை கிராமம். காலையில் வெளியாகும் நாளிதழ் மாலையிலும் மாலையில் வரும் நாளிதழ் காலையிலும் சென்று சேரக்கூடிய தொலைவில் உள்ள ஒரு மலை கிராமம் .
அந்த கிராமத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று ஒட்டகம் மேயத்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. திடீரென அவரது தாயார் இறந்து போக இந்த தகவல் யோகி பாபுவிற்கு தெரிய வருகிறது .அவர் வரும் வரை குளிர்பெட்டியில் வைத்து அவரது தாயின் உடலை பாதுகாத்து வருகின்றனர்.எனினும் அவர் வந்து சேர்வதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. பெற்ற தாயை கடைசி நேரத்தில் பார்க்க முடியாத சோகத்திற்கு ஆளாகிறார் யோகி பாபு .
இதனால் அவர் தாயை வைத்திருந்த குளிர்பெட்டியை விலைக்கு வாங்குகிறார். தாய் நினைவாக பாதுகாத்து வருகிறார். திடீரென அந்த பெட்டி காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதையாம். அவர் தாய் குடியிருந்த கோயில் அந்த குளிர்பெட்டி என்பதனால் அதன் சுருக்கமே 'குய்கோ' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
SOURCE :tamilmurasu.com