தளபதி 68 - லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

Update: 2023-11-20 18:00 GMT

தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இரண்டாம் கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. தாய்லாந்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


லியோ திரைப்படத்திற்கு பிறகு தளபதி 68 திரைப்படம் ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் ஒரு டைம் ட்ராவல் படம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக விஜய் 'டீ ஏஜிங்' செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் திரைப்படமான லூப்பர் திரைப்படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


SOURCE :Cineulagam.com

Similar News