ஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் உள்ளதால் விசாரணைக்கு வைரமுத்து ஒத்துழைக்க வேண்டும்-உயர்நீதிமன்றம்

Update: 2021-06-29 05:30 GMT

வைரமுத்து எழுதிய 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை ஆண்டாள் தெய்வத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக வைரமுத்து மீது 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வைரமுத்து 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் உள்ளதால் வைரமுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர் அந்த வழக்கை வாபஸ் பெற்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார்.

கவிதை என்ற பெயரில் தனது காம உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் வைரமுத்து கடந்த 2017ஆம் ஆண்டு தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் தமிழ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அமெரிக்க அறிஞர் ஒருவர் எழுதியதாக மேற்கோள்காட்டி ஆண்டாள் தெய்வத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய பதிவை அந்த கட்டுரையில் பதிவு செய்து இருந்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வைரமுத்து தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆண்டாள் பற்றி அவதூறாக எழுதிய விவகாரத்தில் முகாந்திரம் உள்ளதாகவும் அதனால் அவர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு வைரமுத்து மனுவை திரும்ப பெற அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து எழுதியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் அது அமெரிக்க அறிஞர் எழுதிய கட்டுரையில் இருந்து மேற்கோள்காட்டப்பட்டது என்று வைரமுத்து கூறி வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

Similar News